ஐரோப்பா

நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கிலாந்திற்கு வருகை தரும் ஹரி, மேகன் தம்பதியினர்

  • June 27, 2026
  • 0 Comments

சசெக்ஸ் கோமகனும் கோமகியும், தங்கள் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லில்லிபெட்டுடன், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது அரச இல்லத்தில் தங்குவதற்கான அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 2022-ல் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் மேற்கொள்ளும் முதல் பிரித்தானிய விஜயம் இதுவாகும். மேலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மன்னர் சார்லஸ் தனது பேரக்குழந்தைகளைப் பார்ப்பதும் இதுவே முதல் முறையாகும். ஒன்பது மாதங்களாகப் பார்க்காத […]

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது மதிமுக

  • June 27, 2026
  • 0 Comments

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ரொஹையா, மு.பூமிநாதன், சு.ஜீவன், சி.கிருஷ்ணன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]

கடந்த ஒரு வருடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரண்டு முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன எனவும் Ghadir Nezami சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் செய்தி

சர்வதேச சட்டத்தை மீறுகிறது அமெரிக்கா – ஈரான் குற்றச்சாட்டு

  • June 27, 2026
  • 0 Comments

ஈரான் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளையும் மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தனது பாதுகாப்பு நிலைகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. அண்டை நாடுகள் தங்கள் நிலப்பரப்பை இத்தகைய பகைமை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் […]

"இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருக்கு எஸ்.எஸ். (SS) என ஒரு ராணுவ பிரிவு இருந்தது. இங்கு கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்று இராணுவம் மற்றும் சட்டவிரோத குழுக்களை வைத்திருந்தனர்" அரசியல் இலங்கை செய்தி

‘ஹிட்லர்போல் ரகசிய ராணுவ குழுக்களை வைத்திருந்த இலங்கை ஆட்சியாளர்கள்’

  • June 27, 2026
  • 0 Comments

“அரசியலில் அநாதையாக்கப்பட்டவர்களே சுரேஷ் சலேயின் கைதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறுகின்றனர். இது சட்டப்பூர்வமான ஒரு கைதாகும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். “இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருக்கு எஸ்.எஸ். (SS) என ஒரு ராணுவ பிரிவு இருந்தது. இங்கு கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்று இராணுவம் மற்றும் சட்டவிரோத குழுக்களை வைத்திருந்தனர்” எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: “தேசிய மக்கள் சக்தி […]

34 ஆண்டுகள் 363 நாட்கள் வயதான டி புரூய்னே, உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணிக்காக கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார். செய்தி விளையாட்டு

பெல்ஜியம் கோல் வேட்டை: வெளியேறியது நியூசிலாந்து

  • June 27, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் (Group G) பிரிவில் பரபரப்பான ஆட்டத்தில், மாற்று வீரராக களம் புகுந்த ரொமேலு லுகாகு (Romelu Lukaku) கடைசி நிமிடங்களில் அடித்த ஹெடர் கோல் மூலம் பெல்ஜியம் அணி தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி இத்தோல்வியின் மூலம் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. வான்கூவரில் உள்ள BC Place Vancouver) மைதானத்தில் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பெல்ஜியம் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. போட்டியின் 28-வது நிமிடத்தில், இடது […]

உலகம்

பாகிஸ்தானில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • June 27, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் இன்று காலை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 35 கிலோமீட்டர் (22 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் எவ்வித உயிரழப்புகளும் ஏற்படவில்லை என்றும், ஏனைய சேதங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்திய மற்றும் யூரேசிய புவித்தட்டுகளின் மோதல் மண்டலத்தில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்தத் […]

தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கே.பாக்யராஜ். அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். செய்தி பொழுதுபோக்கு

திரைக்கதை மன்னரின் இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

  • June 27, 2026
  • 0 Comments

மறைந்த தமிழ்த் திரையுலகின் ‘திரைக்கதை மன்னர்’ கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான அளப்பரிய பங்களிப்பைப் போற்றி, அவரது இறுதிப் பயணத்திற்கு அரச மரியாதை வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையால் முத்திரை பதித்த கே.பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை […]

உலகம்

அமெரிக்காவின் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் – ஜே.டி வான்ஸ் எச்சரிக்கை

  • June 27, 2026
  • 0 Comments

ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைத் தாக்கியதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை அறிவித்துள்ளது, ஈரானின் இஸ்லாமிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் இப்ராஹிம் அஜிஸி ( Ebrahim Azizi) அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு உறுதியளிக்கவில்லை என்றும், பழி போடும் விளையாட்டு இனி எடுபடாது என்றும் கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், பேச்சுவார்த்தைகளின் நடுவில் அமெரிக்கா மீண்டும் ஈரானைத் […]

உலகம்

பல நாடுகள் மீது 100% சுங்கவரி விதிக்க தயாராகும் ட்ரம்ப்

  • June 27, 2026
  • 0 Comments

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவைகள் வரியை விதிக்கும் எந்தவொரு நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் சுங்க வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது, அமெரிக்க நிறுவனங்கள் மீதான பாரபட்சமான வரிவிதிப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இட்டுள்ள பதிவில், அத்தகைய வரியை விதிக்கும் எந்தவொரு நாடும் கடுமையான வர்த்தகத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளதோடு, அந்த நாடுகள் […]

வார்' (VAR) தொழில்நுட்ப சோதனையில் அந்த கோல் Offside என நடுவரால் மறுக்கப்பட்டது. செய்தி விளையாட்டு

எகிப்து வரலாற்று சாதனை – ஈரானுக்கு ஏமாற்றம்

  • June 27, 2026
  • 0 Comments

எகிப்து மற்றும் ஈரான் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் எகிப்து அணி தனது கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக உலகக் கோப்பை நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. ‘குரூப் G’ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள எகிப்து அணி, அடுத்த சுற்றில் (Round of 32) ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. 3-வது இடத்தைப் பிடித்துள்ள ஈரான் அணி அடுத்த […]