ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

RAF Fairford சம்பவம் வெளிநாட்டு சதியா?

பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் முயற்சிக்கு பின்னணியில், வெளிநாட்டின் சார்பில் செயல்பட்ட நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் முயற்சிக்கு பின்னணியில், வெளிநாட்டின் சார்பில் செயல்பட்ட நபர்களுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த 20 வயதுடைய இந்த ஐந்து பிரிட்டிஷ் குடிமக்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் அமெரிக்கப் போர் விமானங்களைக் கொண்ட RAF Fairford தளம் நோக்கி மூன்று வெள்ளை நிற வேன்கள் சென்றதை உள்ளூர் விவசாயி ஒருவர் பார்த்து காவல்துறைக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக ஜூலை மாதத்தில், இந்த விமானத் தளம் தாக்குதலுக்குரிய நியாயமான இலக்கு என்று ஈரானின் புரட்சிகரக் காவல் படை (Iran’s Revolutionary Guards) தெரிவித்திருந்தது.

வெடிபொருள் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதச் செயலுக்குத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இந்த நபர்கள், திங்கள்கிழமை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படுவார்கள் என்று பிரித்தானியா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் லாரன்ஸ் கெய்லர் (Laurence Taylor) தெரிவித்தார்.

அறிக்கையொன்றை வெளியிட்ட கெய்லர், “இந்த விடுவிப்பு விசாரணை முடிந்துவிட்டது என்பதைக் குறிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன். பல கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில், அவர்கள் முழுமையாக விசாரணையின் கீழ் மட்டுமே உள்ளனர்” என்று கூறினார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்,

இந்தச் சம்பவம் ஈரானுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று கூறியதோடு, சந்தேக நபர்களைத் தான் பிணையில் விடுவித்திருக்க மாட்டேன் என்றும், நான் அதைச் செய்திருக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, விரிவான ஆதாரங்களையோ விவரங்களையோ குறிப்பிடாமல், இதன் பின்னணியில் வெளிநாட்டுச் சக்தி ஒன்று இருப்பதாகத் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி