அரசியல் இலங்கை செய்தி

ஜனநாயகத்தின் பிரகாரமே “22” நிறைவேற்றம்

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் மற்றும் நீதிச் சேவைச் சட்டம் ஆகியவை முற்றிலும் ஜனநாயக ரீதியாகவும் அரசமைப்புக்கு அமைவாகவுமே நிறைவேற்றப்பட்டன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் மற்றும் நீதிச் சேவைச் சட்டம் ஆகியவை முற்றிலும் ஜனநாயக ரீதியாகவும் அரசமைப்புக்கு அமைவாகவுமே நிறைவேற்றப்பட்டன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“சட்டமூலம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதற்குரிய கால அவகாசம் வழங்கப்பட்டது. மேலும், உயர்நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கு அமையவே தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

விவாதத்தின் பின்னர் தேவையான திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய அனைத்து உறுப்பினர்களுக்கும் தமது கருத்துக்களை முன்வைக்கச் சமமான வாய்ப்பளிக்கப்பட்டது.

22ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தெளிவான அரசியல் காரணங்களை முன்வைக்க முடியாமல், எதிர்க்கட்சியினர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

சுயாதீன நீதித்துறையின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் பிரதம நீதியரசர் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.

22ஆவது திருத்தத்தின் பின்னர் எதிர்க்கட்சிக்குள் இருக்கும் பிளவு மேலும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. தெளிவான அரசியல் கோஷங்கள் எதுவும் இன்றி நபர்களை மட்டும் ஒன்றிணைத்துச் செல்வதால் ஏற்படும் குழப்ப நிலையே இன்று எதிர்க்கட்சியில் காணப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கும் 22ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கும் இடையே எந்தவொரு தொடர்பும் இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக நாம் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருக்கின்றது.

அதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை அடக்குவதற்குத் தனித்துவமான புதிய சட்ட நடவடிக்கைகளை முன்வைக்க அரசு காய்நகர்த்தி வருகின்றது.

நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முழுமையாகக் கட்டுப்படுத்த அரசு விசேட திட்டமொன்றை அமுல்படுத்தி வருகின்றது.

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகத் தலைவர்களைக் கைது செய்யும் பணிகளும், உள்நாட்டில் உள்ளவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும் பணிகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எந்தவொரு பாதாள உலகக் குழுவுக்கோ அல்லது நபருக்கோ அரசின் எந்தவொரு பாதுகாப்பும் கிடைக்காது. நாட்டின் பாதாள உலகக் குற்றங்களை முற்றாக ஒழித்து அமைதியை ஏற்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை