ஐரோப்பா

வாழ்க்கை செலவு நெருக்கடி – பிரித்தானியர்களுக்கு ஊதிய உயர்வு

தேசிய வாழ்க்கை ஊதியம் (National Living Wage) மற்றம் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியம் (National Minimum Wage) ஆகிய இரண்டையும் உயர்த்துவதாக நிதியமைச்சர் ஜான் ஹீலி அறிவித்துள்ளார்.

தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.

இதன்படி  2027 ஏப்ரல் முதலாம் திகதி முதல் தேசிய வாழ்க்கை ஊதியம் 13.21 பவுண்டுகளாக உயர்த்தப்படவுள்ளது.

இது, தேசிய வாழ்க்கை ஊதியத்தில் பணிபுரியும் ஒரு முழுநேர ஊழியரின் மொத்த ஆண்டு வருமானத்தில் 910 பவுண்டுகள் உயர்வதற்கு சமமாகும்.

அதேவேளையில், 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய குறைந்தபட்ச ஊதியம், ஒரு மணி நேரத்திற்கு 11.27 பவுண்டுகளாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரையாற்றிய  ஜான் ஹீலி, மிகக் குறைந்த ஊதியம் பெறும் 23 லட்சம் ஊழியர்களுக்கு, தேசிய குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தேசிய வாழ்க்கை ஊதியம் ஆகிய இரண்டையும் 3.9 சதவீதம் உயர்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் அறிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்