இலங்கை

ரோஹண விஜேவீரவுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என்றால் ஏன் திலீபனுக்கு முடியாது?

ரோஹண விஜேவீரவுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்த முடியும் என்றால், அகிம்சைப் போராளி திலீபனுக்கு ஏன் சிலை வைக்க முடியாது? தியாகதீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு? என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற அந்த மோசமான செயல்பாட்டை இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதுமட்டுமல்லாமல், அந்தப் பிழையான செயல்பாட்டை மேற்கொண்ட பின்னரும், அதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறி, குழந்தைகள் பேசுவது போன்ற கருத்துக்களை சிலர் வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இடம்பெறும் இந்தப் பிழையான செயல்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

மிக முக்கியமாக, இந்த விடயம் தொடர்பாக குறுகிய அரசியல் இலாபம் தேடும் சில தரப்பினரும் இருக்கின்றனர்.

அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் என்னவென்றால், அந்தச் சிலை அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டமை ஸ்ரீலங்கா பொலிஸாரினாலேயே மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இந்த விடயம் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சில தரப்பினர் பல்வேறு கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்” என்றார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்