ஸ்பெயின் ரயில் விபத்தில் முன்னாள் வேலைவாய்ப்பு அமைச்சர் உயிரிழப்பு
ஸ்பெயினில் நேற்று இடம்பெற்ற ரயில் விபத்தில் முன்னாள் அமைச்சர் ஃபாத்திமா பானெஸ் Fatima Banez உயிரிழந்துள்ளார்.
இதனை ஸ்பெயினின் மக்கள் கட்சி (People’s Party) உறுதிப்படுத்தியுள்ளது.
பானெஸ் அப்போதைய பிரதமர் மரியானோ ரஜோய் தலைமையிலான அரசாங்கத்தில், 2011 முதல் 2018 வரை வேலைவாய்ப்பு அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
அதன்பிறகு, அவர் தனியார் துறையில், CEOE அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.
அவருக்கு அரச தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும் CEOE அறக்கட்டளை, “ஆழ்ந்த துயரத்துடன்” பானெஸுக்கு விடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது.
“அவரது அன்பான குணம், தாராள மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை வணிகத் துறையிலும், ஒட்டுமொத்த CEOE குழுவிலும் அழியாத தடத்தைப் பதித்துள்ளன” என்று அந்த அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது.




