ஐரோப்பா

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – 1100 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசம்

  • August 14, 2026
  • 0 Comments

தென்மேற்கு பிரான்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது. அப்பகுதியிலிருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரான்சின் 75 பிராந்தியங்களுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், மேற்கு ஜெர்மனியிலும் காட்டுத்தீ காரணமாக 2,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலகம்

கப்பல்களில் மின்காந்த ஏவுதல் அமைப்பிற்கு மாறாக பாரம்பரிய நீராவி விசைக்கு மாற ட்ரம்ப் உத்தரவு

  • August 14, 2026
  • 0 Comments

அமெரிக்கக் கடற்படை தனது மேம்பட்ட மின்காந்த ஏவுதல் அமைப்பைக் கைவிட்டு பாரம்பரிய அமைப்பை பின்பற்ற வேண்டும் என ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது பாரம்பரிய முறையான நீராவி விசை உந்துவிசைகளுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கமைய யுஎஸ்எஸ் டோரிஸ் மில்லரில் USS Doris Miller தொடங்கி, இந்தத் தொழில்நுட்பத்தை அகற்றுவதற்கான திட்டங்களை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பென்டகனும் கடற்படையும் வலியுறுத்துகின்றன. எவ்வாறாயினும் இந்த அமைப்பைத் தயாரிக்கும் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனம், கப்பலின் […]

ஐரோப்பா

பிரான்சில் 07 இலட்சம் வரி செலுத்துவோரின் தகவல்கள் திருட்டு

  • August 14, 2026
  • 0 Comments

பிரான்சில் தனிநபர்கள் மற்றும் பிரபல தொழில் அதிபர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக பிரெஞ்சு நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. தீங்கிழைக்கும் நபர் ஒருவர், ஜூன் மாத இறுதியில் வரி முகமையான பொது நிதிகளுக்கான பொது இயக்குநரகத்தில் ஊடுருவியதாக அவ் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. திருடப்பட்ட தரவுகள் குறித்து தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள விபரங்கள் வெளியிடப்படும் எனவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. “சம்பந்தப்பட்ட பயனர்கள், கலந்தாலோசிக்கப்பட்ட அல்லது எடுக்கப்பட்டிருக்கக்கூடிய தரவுகள் மற்றும், பொருந்தக்கூடிய இடங்களில், பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை […]

உலகம்

பிரசவ விசாவில் அமெரிக்கா செல்வோருக்கு முட்டுக்கட்டை – பணிக்குழு நியமனம்

  • August 14, 2026
  • 0 Comments

பிரசவத்திற்காக அமெரிக்கா வரும் சுற்றுலாப் பயணிகளை கண்டறிய அமெரிக்க அரசாங்கம் புதிய பணிக்குழுவொன்றை நியமித்துள்ளது. ஏற்கனவே 600-க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த இந்த பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த குழுவானது உலகெங்கிலும் உள்ள விசா வைத்திருப்பவர்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யும், பயண வரலாறுகளை ஆராயும். மேலும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முகமைகளுடன் தகவல்களை ஒருங்கிணைக்கும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்  குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக […]

ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பதற்கான மூலோபாய நடவடிக்கை திட்டத்தின் பொதுவான கொள்கைகளுக்கு, ஈரானிய நாடாளுமன்றத்தின் கவுன்சில்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைக் கட்டுப்படுத்த ஈரானின் மூலோபாயத் திட்டத்திற்கு ஒப்புதல்

  • August 14, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பதற்கான மூலோபாய நடவடிக்கை திட்டத்தின் பொதுவான கொள்கைகளுக்கு, ஈரானிய நாடாளுமன்றத்தின் கவுன்சில்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானின் ‘தஸ்னீம்’ (Tasnim) செய்தி நிறுவனத்திடம் இக்குழுவின் செய்தித் தொடர்பாளர் Valiullah Bayati கருத்து வெளியிடுகையில், “ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான மூலோபாய நடவடிக்கை திட்டம் கவுன்சில் ஆணையத்தால் பரிசீலிக்கப்பட்டது. பல்வேறு கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், அதன் பொதுவான வரைவுத் […]

இஸ்ரேல்மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி முகமது முஷ்டஹா Mohammed Bassam Mohammed, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். உலகம் செய்தி

ஒக்டோபர் 7 தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி இஸ்ரேல் தாக்குதலில் பலி

  • August 14, 2026
  • 0 Comments

இஸ்ரேல்மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி முகமது முஷ்டஹா Mohammed Bassam Mohammed, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். காசாவில் சிறைபிடிக்கப்பட்ட பல இஸ்ரேலிய பிணைக் கைதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்காக இவர் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார். இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களைத் திட்டமிட்டதால் இவர் குறிவைக்கப்பட்டார் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 7 தாக்குதலில் பங்கேற்ற ஒவ்வொரு பயங்கரவாதியையும் கண்டறிந்து அழிக்கும் இஸ்ரேலின் தீவிர நடவடிக்கையின் […]

நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிக்கும் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

  • August 14, 2026
  • 0 Comments

நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிக்கும் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார். அதேபோல நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையையும் நீடிக்கும் நீதிமன்ற திருத்தச் சட்டமூலமும் அன்றைய நாளில் சபையில் முன்வைக்கப்படவுள்ளது. அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் சில சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையிலேயே திட்டமிட்டப்படி சட்டமூலம், முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் […]

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு

  • August 14, 2026
  • 0 Comments

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கி வைத்தார். டித்வா […]

ஈரான்மீதான போர் அதன் தொடக்க இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும், மாறாக அது அந்நாட்டின் தீவிரப் போக்காளர்களை பலப்படுத்த மட்டுமே உதவியுள்ளது என்றும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே (Espen Barth Eide) தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீதான போர் தோல்வி: நோர்வே வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டு

  • August 14, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போர் அதன் தொடக்க இலக்குகளை அடையத் தவறிவிட்டது என்றும், மாறாக அது அந்நாட்டின் தீவிரப் போக்காளர்களை பலப்படுத்த மட்டுமே உதவியுள்ளது என்றும் நோர்வே நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஈடே (Espen Barth Eide) தெரிவித்துள்ளார். அல் ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் போர் தனது தொடக்க நோக்கங்கள் எதையுமே அடையவில்லை என்பது மிகத் தெளிவாக புரிகின்றது. மேலும், இதன் மூலம் ஈரானின் தீவிரப் போக்காளர்கள் பலவீனமடைவதற்குப் பதிலாக […]

இலங்கை செய்தி

இலங்கை, வியட்நாமுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பம்

  • August 14, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையில் முதல் தடவையாக நேரடி விமான சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. வியட்நாமுக்கு சொந்தமான 02 விமான சேவைகளின் ஊடாக இந்த சேவை இடம்பெறும் என விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி, அருண ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க மற்றும் வியட்நாமின் Ho Chi Minh நகருக்கு இடையில் இந்த நேரடி விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, வியட்நாம் எயார்லைன்ஸ் விமான சேவையின் ஊடாக எதிர்வரும் 16ஆம் […]