இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் வழங்கி வைப்பு

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், 1.3 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் 19 மீன்பிடிப் படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இயந்திர மீன்பிடிப் படகுகள் வழங்கி வைத்தார்.

டித்வா புயலினால் மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்களை இழந்து வாழ்வாதார ரீதியாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கிய மீனவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீண்டும் தமது மீன்பிடித் தொழிலை ஆரம்பித்து, வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீம, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு படகுகள் வழங்கி வைத்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை