பிரசவ விசாவில் அமெரிக்கா செல்வோருக்கு முட்டுக்கட்டை – பணிக்குழு நியமனம்
பிரசவத்திற்காக அமெரிக்கா வரும் சுற்றுலாப் பயணிகளை கண்டறிய அமெரிக்க அரசாங்கம் புதிய பணிக்குழுவொன்றை நியமித்துள்ளது.
ஏற்கனவே 600-க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த இந்த பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த குழுவானது உலகெங்கிலும் உள்ள விசா வைத்திருப்பவர்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யும், பயண வரலாறுகளை ஆராயும்.
மேலும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட முகமைகளுடன் தகவல்களை ஒருங்கிணைக்கும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவதற்கான ட்ரம்பின் பரந்த முயற்சியுடன் இந்த ஒடுக்குமுறை ஒத்துப்போகின்றமை குறிப்பிடத்தக்கது.




