மீண்டும் தாக்குல்களை தொடங்கிய அமெரிக்கா – பிடியை இறுக்கும் ஈரான்
ஈரானின் தெற்குக் கடற்கரையோரம் உள்ள ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் நேற்றைய தினம் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியது.
இது இரு தரப்பிலிருந்தும் புதிய பகைமைகளையும் அச்சுறுத்தல்களையும் தூண்டியுள்ளது.
தெற்கு ஜோர்டானிய நகரமான அகாபாவின் Aqaba மீது வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், மஃப்ராக்கில் Mafraq அபாய ஒலி எழுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜோர்டானின் வான்வெளிக்குள் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாக அந்நாட்டின் ஆயுதப் படைகள் குறிப்பிட்டுள்ளன.
அதேநேரம் “ஈரானிய ஆக்கிரமிப்பை” இடைமறித்து வருவதாக குவைத் இராணுவம் அவசர எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் “ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான பிடியை இறுக்கியுள்ளன” என்றும், அமெரிக்கா தனது செயல்களுக்காக “வருந்தும்” என்றும் ஈரானிய ஊடகங்கள் வழியாக ஐ.ஆர்.ஜி.சி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.




