உலகம் செய்தி

ஒக்டோபர் 7 தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி இஸ்ரேல் தாக்குதலில் பலி

இஸ்ரேல்மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி முகமது முஷ்டஹா Mohammed Bassam Mohammed, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல்மீது ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய ஹமாஸ் தளபதி முகமது முஷ்டஹா Mohammed Bassam Mohammed, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

காசாவில் சிறைபிடிக்கப்பட்ட பல இஸ்ரேலிய பிணைக் கைதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததற்காக இவர் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.

இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களைத் திட்டமிட்டதால் இவர் குறிவைக்கப்பட்டார் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 7 தாக்குதலில் பங்கேற்ற ஒவ்வொரு பயங்கரவாதியையும் கண்டறிந்து அழிக்கும் இஸ்ரேலின் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது.

இந்தத் தளபதி ஜூலை இறுதியில் தாக்கப்பட்ட நிலையில், காயங்களால் உயிரிழந்ததாகத் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி