இந்தியா

எரிபொருள் விலையேற்றத்தால் விமான சேவையை நிறுத்தும் ஏர் இந்தியா

  • May 13, 2026
  • 0 Comments

ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமான சேவைகளை குறைப்பதாகவும், 06 முக்கிய வழித்தடங்களில் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் சில நாடுகளின் வான்வெளி கட்டுப்பாடு போன்ற காரணங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சில வழித்தடங்களில் விமான சேவைகளைக் குறைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பும் ஒகஸ்ட் வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஏர் இந்தியா, டெல்லி-சிகாகோ, […]

இலங்கை

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி – நந்தலால் வீரசிங்க வழங்கிய உறுதிமொழி!

  • May 13, 2026
  • 0 Comments

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட மோசடி சம்பவத்தை தொடர்ந்து அவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய இலங்கை மத்திய வங்கியும் (CBSL) நிதி அமைச்சகமும் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். இன்று (13) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற […]

இலங்கை செய்தி

பொலிஸாரை கண்டதும் ஹெரோயினை விழுங்கிய இளைஞன்: யாழில் சம்பவம்!

  • May 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிப்பதற்காக, தன்னிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய இளைஞர் ஒருவர், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்று வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது, பொலிஸாரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், தனது கையில் வைத்திருந்த ஹெரோயின் பொட்டலத்தை வாய்க்குள் போட்டுத் […]

உலகம் செய்தி

லெபனானில் போர் பதற்றம் தீவிரம் – இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 2000 இற்கும் மேற்பட்டோர் பலி

  • May 13, 2026
  • 0 Comments

லெபனான் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 2,896 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் 2ஆம் திகதி முதல் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழந்தவர்களில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே தாக்குதல்களில் 8,824 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவலை […]

இந்தியா செய்தி

தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏ -க்கள் பதவி பறிபோகிறதா?

  • May 13, 2026
  • 0 Comments

எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை மீறி சில சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கட்சிக்கு ஆதரவளித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு எதிராக கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு காணப்படுவதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சட்ட நிபுணர்களின் விளக்கப்படி, கட்சி தாவலை தடுக்கும் நோக்கில் 1985ஆம் ஆண்டு 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் 10வது அட்டவணை சேர்க்கப்பட்டது. இதன்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் தானாகவே தனது கட்சியிலிருந்து விலகினால் அல்லது […]

ஐரோப்பா செய்தி

அரசாங்கம் வலுவான பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் – மன்னர் நம்பிக்கை

  • May 13, 2026
  • 0 Comments

உலகம் தற்போது அதிகரித்து வரும் அபாயகரமான மற்றும் நிலையற்ற சூழலில் இருப்பதாக மன்னர் மூன்றாம் சாள்ஸ் (Charles III) எச்சரித்துள்ளார். பிரித்தானியாவின் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பொருளாதார அமைப்புகள் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாகும் நிலையில்,  அரசு அதற்கு வலிமையுடன் பதிலளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல் உள்ளிட்ட உலகளாவிய பதற்றங்களை சுட்டிக்காட்டிய அவர் நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதார நிலைத்தன்மையையும் காக்க அரசு உறுதியுடன் செயல்படும் என்று கூறினார். இதேவேளை, யூத-எதிர்ப்பை எதிர்க்கவும் அனைத்து சமூகங்களும் […]

இந்தியா

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு!

  • May 13, 2026
  • 0 Comments

இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி  6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையொன்றில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அதிகரித்த வரிகள்  தேவையைக் குறைக்கக்கூடும். இருப்பினும், அவை இந்தியாவின் வர்த்தப் பற்றாக்குறையைக் குறைக்கவும், ஆசியாவின் மிக மோசமாகச் செயல்படும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தலைமைப் போட்டி : கூட்டாக கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

  • May 13, 2026
  • 0 Comments

தற்போதைய அரசியல் சூழலில், “இது  தலைமைப் போட்டிக்கான நேரமல்ல” என்று வலியுறுத்தி, சர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டாம் எனக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். ஆளும் தரப்பில் அங்கம் வகித்த நான்கு அமைச்சர்கள் பதவிவிலகியுள்ள நிலையில், 80க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இந்த அழுத்தங்கள் இருந்தபோதிலும், சர் கெய்ர் தனது அமைச்சரவையிடம் […]

உலகம் செய்தி

சீனாவை சென்றடைந்த ட்ரம்ப்

  • May 13, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவை சென்றடைந்துள்ளார். சீன ஜனாதிபதி Xi Jinping உடன் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்கபதற்காக அவர் Beijing ஐ சென்றடைந்துள்ளார். 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் சீனப் பயணம் இதுவாகும். உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார சக்திகளின் தலைவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்த சந்திப்பில் வர்த்தக உறவுகள், தைவான் […]

உலகம் செய்தி

லெபான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 08 பேர் பலி

  • May 13, 2026
  • 0 Comments

லெபானின் தெற்கு பகுதிகளில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட சுமார் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு லெபனானின் முக்கிய கடலோர பாதையான சிடோன் (Sidon) – தெற்கு நெடுஞ்சாலையை இலக்குவைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் பர்ஜா (Barja),ஜியே(Jiyeh) மற்றும் சாடியாத் (Saadiyat) பகுதிகளில் இடம்பெற்றதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இஸ்ரேல் மற்றும் லெபனானை தளமாகக் கொண்ட ஆயுதக் குழுக்களுக்கிடையிலான […]