இந்தியா செய்தி

விஜய்யுடனான சந்திப்பை இடைநிறுத்தினார் கர்நாடக முதல்வர்

கர்நாடகாவில் காவிரி விவகாரத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வருகை தருவது சரியாக இருக்காது எனக் கூறி, அவருடனான சந்திப்பைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைப்பதாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காவிரி விவகாரத்தால் பதற்றமான சூழல் நிலவுவதால், தமிழக முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு வருகை தருவது சரியாக இருக்காது எனக் கூறி, அவருடனான சந்திப்பைச் சிறிது காலத்திற்கு ஒத்திவைப்பதாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்துப் பேசத் தமிழக முதல்வர் விஜய் நேரம் கேட்டிருந்தார்.

இதற்குச் சம்மதம் தெரிவித்த டி.கே.சிவகுமார், வரும் ஆகஸ்ட் 3-ம் திகதி இச்சந்திப்பு நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்தார்.

இருப்பினும், இச்சந்திப்பிற்குப் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், விஜய் பெங்களூரு வரும்போது விமான நிலையத்தை முற்றுகையிடப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகேதாட்டு விவகாரம் குறித்து விரிவாக விவாதிப்பதற்காக, ஆகஸ்ட் 2-ம் தேதி கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சியின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி