உலகம்

தைவானை சுற்றி இராணுவ பயிற்சி : பரபரப்பை ஏற்படுத்திய சீனா!

  • May 26, 2026
  • 0 Comments

தைவானைச்  சுற்றி சீனா இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நேற்றைய தினம் ஜே-16 ரகப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட 21 சீன விமானங்களை கண்டதாக தைவான் குறிப்பிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் தைவானுக்கு அருகில் சீனா மேற்கொள்ளும் இரண்டாவது  இராணுவப் பயிற்சி இதுவாகும். இதைத் தொடர்ந்து, தைவான் தனது சொந்தக் கப்பல்களையும் போர் விமானங்களையும் கண்காணிப்புக்காக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது. தைவான் விவகாரம் தொடர்பாக சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கிற்கும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!

  • May 26, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் விஜய், நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றார். பிரதமர் மோடி உட்பட முக்கிய தலைவர்களை சந்திக்கும் நோக்கிலேயே அவரது டெல்லி வியம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேச்சு நடத்துவார் என தெரியவருகின்றது. இந்த சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் தமிழக முதல்வர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

உலகம் செய்தி

லெபனான் தாக்குதல் தொடர்ந்தால் அமீரகம் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தலாம் – ஆய்வாளர் எச்சரிக்கை

  • May 26, 2026
  • 0 Comments

லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக ஈரான் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என தெஹ்ரான் பல்கலைக்கழக ஆய்வாளர் முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார். அல் ஜசீராவுக்கு வழங்கிய பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, “தற்போது இரண்டு முக்கிய பதற்ற நிலைகள் உருவாகியுள்ளன. ஒன்று ஹோர்முஸ் நீரிணை பகுதியில், மற்றொன்று லெபனானில். ஈரானும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருவதற்கு முன், அந்த உடன்பாட்டிலிருந்து லெபனான் விவகாரத்தை தனியே பிரிக்க இஸ்ரேல் பிரதமர் […]

ஐரோப்பா

UKவில் சிறை கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : புதிய ட்ரோன் கலாசாரத்தால் நெருக்கடி!

  • May 26, 2026
  • 0 Comments

போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சிறைகளில் போதைப்பொருள் வியாபாரிகள் தண்டனையின்றி செயல்படுவதாக பிரித்தானியாவின் சிறைச்சாலைகளின் தலைமை ஆய்வாளர் சார்லி டெய்லர்  ( Charlie Taylor) எச்சரித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2025-இல்   இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைகளில் 48 போதைப்பொருள் தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது 2010-ஆம் ஆண்டில் இருந்ததை விட 2,300 ஆல் அதிகரித்துள்ளது. சிறைகளுக்குள் ட்ரோன்கள் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதே இந்த அதிகரிப்புக்கு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ரயிலுடன் மோதிய பாடசாலை பேருந்து – 04 பேர் உயிரிழப்பு!

  • May 26, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் பாடசாலை பேருந்து ஒன்று ரயில் ஒன்றுடன் மோதி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்தை தொடர்ந்து பெல்ஜிய அவசர சேவைகள் களமிறக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த மோதலின் சூழ்நிலைகள் குறித்து அரசு வழக்கறிஞர்களும் தடயவியல் குழுக்களும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

உலகம்

சியோலுடன் பகைமை பாராட்டும் வடகொரியா : மஞ்சல் கடலில் ஏவுகணை சோதனை!

  • May 26, 2026
  • 0 Comments

உறவுகளை மேம்படுத்துவதற்கான தென்கொரிய அரசாங்கத்தின் முயற்சிகளை வடகொரியா புறக்கணித்து அந்நாட்டை தனது  “பகைமையான” எதிரி என்று குறிப்பிட்டுள்ளது. மஞ்சள் கடலில் இன்று பாலிஸ்டிக் ஏவுகணை உட்பட பல எறிகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்ததாக தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. சுமார் 1:00 மணியளவில், வடகொரிய நகரமான சோங்ஜூவிலிருந்து குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதை கண்டதாக தென்கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் தெரிவித்துள்ளனர். ஏவுகணைகள் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் பறந்ததாகவும், அவற்றின் விவரக்குறிப்புகள் மற்றும் பறக்கும் தூரத்தை […]

உலகம் செய்தி

இஸ்ரேல் வேரோடு அழிக்கப்படும்: ஈரான் உச்ச தலைவர் சபதம்!

  • May 26, 2026
  • 0 Comments

இஸ்ரேலை பிராந்தியத்தின் ஆபத்தான புற்றுநோய் என்று குறிப்பிட்டுள்ள ஈரானின் உச்ச தலைவர் Mojtaba Khamenei, அந்த நாடு எதிர்காலத்தில் வேரோடு அழிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். ஹஜ் மற்றும் ஈத் அல்-அதா பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு சூளுரைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவது இந்த ஆண்டு இஸ்லாமிய சமூகத்தின் முக்கிய கடமையாக இருக்கும் என்று Mojtaba Khamenei குறிப்பிட்டுள்ளார். மேலும், இஸ்லாமிய நாகரிகமே உலகை ஆளும் என்றும், எதிரிகளுக்கு எதிராக ஈரான் […]

உலகம் செய்தி

பிஜியில் புதிய துறைமுகம்: ‘குவாட்’ நாடுகள் அதிரடி வியூகம்!

  • May 26, 2026
  • 0 Comments

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பிஜியில் (Fiji) கூட்டாக புதிய துறைமுகத்தை உருவாக்குவதற்கும், முக்கியத் தாதுக்கள் (Critical Minerals) மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய ‘குவாட்’ (Quad) நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் புதுடெல்லியில் நடத்திய சந்திப்பில் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். மேற்படி நான்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, கடந்த 2024 செப்டம்பருக்குப் பிறகு நடைபெற்ற மூன்றாவது குவாட் வெளியுறவு அமைச்சர்கள் […]

செய்தி

இலங்கையிலேயே முதன்முறையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ வடக்கில் அறிமுகம்!

  • May 26, 2026
  • 0 Comments

முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (One-Stop Investment Portal – OSSI) வடக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் செயற்றிட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று செவ்வாய்க்கிழமை (26.05.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ (NIS-26) இன் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையிலேயே இந்த ‘ஒருவழி […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

எம்எல்ஏக்களின் தாவல்களால் தடுமாறும் அதிமுக!

  • May 26, 2026
  • 0 Comments

அதிமுகவில் உள்ளக மோதல் உக்கிரமடைந்துள்ளது. ஏற்கனவே மூன்று எம்எல்ஏக்கள் பதவி விலகியுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா என்பவரே இவ்வாறு பதவி விலகியுள்ளார். அதிமுக தற்போது இரண்டு அணிகளாக பிளவு பட்டிருக்கும் நிலையில், அதிலுள்ள பலர் தவெகவை நோக்கி படையெடுக்கின்றனர். சி.வி.சண்முகம் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகிய 3 பேரும் நேற்று தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் […]