உலகம்

கென்யாவில் மக்கள் போராட்டம் : இருவர் மீது துப்பாக்கிச்சூடு!

  • June 2, 2026
  • 0 Comments

கென்யாவில் எபோலா தனிமைப்படுதல் கூடாரங்களை அமைக்க அமெரிக்கா தயாராகி வருகின்ற நிலையில் இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய கென்யாவின் நன்யூகி (Nanyuki) நகரில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர், “தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது” சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் அதிகாரிகள் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இதேவேளை நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் […]

ஐரோப்பா

வாட்ஸ்அப் உரையாடல்கள் – புதிய சர்ச்சையில் சிக்கிய ஸ்டாமர்!!

  • June 2, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் வாட்ஸ்அப்பில் (WhatsApp) தானாகவே மறையும் செய்தி அம்சத்தைப் பயன்படுத்துவதாக டவுனிங் தெரு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால்  ‘மாண்டல்சனுடனான உரையாடல்களை பெற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், பயனர்கள் செய்திகளை 24 மணிநேரம், 7 நாட்கள் அல்லது 90 நாட்களுக்குப் பிறகு தானாகவே மறையுமாறு அமைக்க அனுமதிக்கிறது. இதன் பொருள், பிரதமருக்கும் மாண்டல்சனுக்கும் இடையேயான கடந்தகால உரையாடல்களை இனி மீட்டெடுக்க முடியாது என்பதாகும். மாண்டல்சனின் பதவி நியமனம் குறித்து வெளியிடப்பட்ட கோப்புகளில்,   iMessage […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் : நோர்வே வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்!

  • June 2, 2026
  • 0 Comments

ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை கைப்பற்ற ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதி கைப்பற்றப்பட்டால், லண்டன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவதற்கான அனைத்து சாத்தியமான வாய்ப்புகளும் உள்ளதாக நோர்வேயின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார். நோர்வேயின் பிரதான நிலப்பரப்பிற்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) தீவுக்கூட்டத்திற்கும் இடையே உள்ள சுமார் 400 மைல் அகலமுள்ள பகுதியை கைப்பற்ற ரஷ்யா தயாராகி வருவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் முகாமிட்டுள்ள ரஷ்யாவின் சக்திவாய்ந்த வடக்குக் […]

உலகம் செய்தி

பாதுகாப்புத்துறை ஏற்றுமதியில் சாதனை படைத்த இஸ்ரேல்!

  • June 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் $19.2 பில்லியன் என்ற முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இஸ்ரேலின் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதைய போர்க்களங்களில் இந்தத் தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாகச் செயல்படுவதால், சர்வதேச அளவில் இவற்றுக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது என போர் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பா மற்றும் […]

இந்தியா

இந்தியாவில் 116-118°F வெப்பநிலை பதிவு!! இரவில் பணிப்புரியும் மக்கள்!

  • June 2, 2026
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மே மாதம் முழுவதும் உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு 47-48°C (116-118°F) அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் இந்தியாவில் அதிஉச்சபட்ச வெப்பநிலை பதிவான மாநிலமாக உத்தரப் பிரதேச மாநிலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பலர் கட்டுமானம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட தொழில்களை மேற்கொள்கின்ற நிலையில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஏற்ப மக்கள் தங்களை தகவமைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் உச்சபட்ச வெப்பநிலை காரணமாக மக்கள் தங்களின் அன்றாட செற்பாடுகளை இரவு நேரத்திற்கு மாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் கொழும்பு வந்தன!

  • June 2, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படைக்கு, அமெரிக்கா கடற்படையால் வழங்கப்பட்ட TH-57 ‘Sea Ranger பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட ஹெலிகாப்டர்கள் தற்போது, இரத்மலானவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தொழில்நுட்பக் கட்டமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்த பின்னர், இவை சேவையில் சேர்க்கப்பட்டு செயற்பாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த உதவியானது இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க […]

ஐரோப்பா

லோர்ட் மாண்டல்சனின் பதவி நியமனம் குறித்த சர்ச்சைக்குரிய ஆவணங்கள் வெளியீடு!

  • June 2, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கான இங்கிலாந்து தூதராக லோர்ட் மாண்டல்சன் ( Lord Mandelson) பணியாற்றிய காலம் தொடர்பான இரண்டாவது தொகுதி ஆவணங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த பெப்ரவரி மாதம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொதமாக 1500 இற்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. புதிய கோப்புகளில், லார்ட் மாண்டல்சனுக்கும் அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையேயான 160 […]

இலங்கை செய்தி

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: இணையவழி சாட்சியமளிக்க கோட்டாவுக்கு அனுமதி!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பான வழக்கில், நிகழ்நிலை ஊடாகத் தோன்றிச் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10ஆம் திகதி, யாழ்ப்பாண நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர், […]

உலகம்

எல் நினோ நிகழ்வால் அதிகரிக்கும் வெப்பநிலை!! ஐ.நா எச்சரிக்கை!

  • June 2, 2026
  • 0 Comments

எதிர்காலத்தில் எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஐக்கிய நாடுகள் வானிலை ஆய்வு நிறுவனம் ஒரு முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலக வானிலை ஆய்வு அமைப்பின்படி, எல் நினோ என்பது மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிகரிக்கும் ஒரு இயற்கை நிகழ்வாகும். இது பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும். வெப்பமடையும் கடல் நீரே எல் நினோ நிகழ்வின் வளர்ச்சிக்குக் காரணம் என்றும், இது […]

உலகம் ஐரோப்பா செய்தி

போரில் பங்கேற்கமாட்டோம்: ஸ்பெயின் மீண்டும் திட்டவட்டம்!

  • June 2, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளில் ஸ்பெயின் ஒருபோதும் பங்கேற்காது என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Jose Manuel மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய பதற்றமான சூழலுக்கு ராணுவ ரீதியான தீர்வு ஏதுமில்லை என்றும், போரைத் தவிர்த்து சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் செயல்படுவதே சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வன்முறையைத் தூண்டும் செயல்கள் உலகளாவிய குழப்பத்திற்கே வழிவகுக்கும் என்பதால், இந்த மோதலில் இருந்து ஸ்பெயின் விலகி இருக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேலுடனான தனது தூதரக உறவுகளைத் […]