UKவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – £1,400 இழக்க வாய்ப்பு
பிரித்தானியாவின் வேலை மற்றும் ஓய்வூதியத் துறை (DWP) ஓய்வூதியக் கடன் மறுஆய்வுப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.
2031 ஆம் ஆண்டுக்குள் நலத்திட்டச் செலவினங்களில் இருந்து £370 மில்லியனைச் சேமிக்கும் முயற்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளை இலக்காகக் கொண்டு இந்த பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 95,000 முதல் 100,000 வரையிலான ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்படலாம் என்றும், சுமார் 10,700 பயனாளிகள் இந்த ஆண்டு சராசரியாக £1,400 பவுண்ட்ஸை இழக்க நேரிடும் என்றும் தெரியவந்துள்ளது.
பயனாளிகள் தங்கள் சொத்துக்களைக் குறைவாகக் குறிப்பிடுவது அல்லது விதிகளின்படி அனுமதிக்கப்பட்டதை விட நீண்ட காலம் வெளிநாட்டில் தங்கியிருப்பது போன்ற காரணங்களால், ஓய்வூதியக் கடன் கோரிக்கைகள் 33 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் ஓய்வூதியத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய மறு ஆய்வு செய்யப்படும் போது சில நபர்கள் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




