ஈரான் மீதான பொருளாதாரத் தடை – அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை சீனா கண்டித்துள்ளது.
அத்துடன் இந்தத் தண்டனை நடவடிக்கைகள் பதட்டங்களைத் தீவிரப்படுத்தி, பிற பாதிப்பு அபாயங்களை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
ஈரானுடனான தனது ஒத்துழைப்பு சர்வதேச சட்டத்திற்கு இணங்குகிறது என்று கூறிய பெய்ஜிங், தனது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.
இதற்கிடையே இந்தத் தடைகளுக்கு தெஹ்ரான் முழுமையாகத் தயாராக உள்ளது என்றும், எதிரிகள் ஒரு தாக்குதலை எதிர்பார்க்க வேண்டும் என்றும் ஈரான் நிதியமைச்சர் அலி மதனிசாதே Ali Madanizadeh தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானுக்கு எதிராக ஒரு பொருளாதாரத் தாக்குதலைத் தொடுப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்தத் தடைகள் தொகுப்பை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




