ஐரோப்பா

பெல்ஜியத்தில் அச்சுறுத்தலாக மாறியுள்ள துப்பாக்கி கலாச்சாரம் – காப்பாற்ற வருமாறு அழைப்பு

பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக  துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் நேற்று இரவும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து மேயர் ஜீன் ஸ்பினெட்  Jean Spinette யாராவது வந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

“மூன்று ஆண்டுகளாக நான் கூடுதல் படையினரைக் கேட்டு வருகிறேன்,” என்றும்  அவர் கூறினார்.

2026-ல் பரந்த பிரஸ்ஸல்ஸ் பிராந்தியம் முழுவதும் குறைந்தது 66 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்