இடைத்தேர்தலில் குடியரசு கட்சியினருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி – ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்ப் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளார். இதற்கமைய இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால், ஒவ்வொரு அமெரிக்க வயது வந்தவருக்கும் 5,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான “ட்ரம்ப் டிவிடெண்ட்” (Trump dividend) வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வாக்காளர்களைத் தனது கட்சிக்கு ஆதரவளிக்கத் தூண்டும் வகையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குடியரசுக் கட்சியின் முதல் இடைக்கால மாநாட்டில் ட்ரம்ப் இந்த முன்மொழிவை வெளியிட்டார். […]













