உலகம்

இடைத்தேர்தலில் குடியரசு கட்சியினருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ட்ரம்ப் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளார்.

இதற்கமைய இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டால், ஒவ்வொரு அமெரிக்க வயது வந்தவருக்கும் 5,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான “ட்ரம்ப் டிவிடெண்ட்” (Trump dividend) வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

வாக்காளர்களைத் தனது கட்சிக்கு ஆதரவளிக்கத் தூண்டும் வகையில் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குடியரசுக் கட்சியின் முதல் இடைக்கால மாநாட்டில் ட்ரம்ப் இந்த முன்மொழிவை வெளியிட்டார். ஆனால், இந்தத் தொகை எவ்வாறு வழங்கப்படும் அல்லது இது சட்டப்பூர்வமானதா என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

சுமார் 270 மில்லியன் அமெரிக்க வயது வந்தவர்கள் உள்ளனர் என்பதால், இத்திட்டத்திற்கு ஏறக்குறைய 1.35 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்காலத் தேர்தல் தொடர்பில் ட்ரம்ப் ஆற்றிய உரையில், “அமெரிக்காவின் எதிர்காலத்தை தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியினரிடம் ஒப்படைத்தால், நமது நாடு அடுத்த பத்தாண்டுகளை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவே செலவிட வேண்டியிருக்கும்,” என்று  கூறியுள்ளார்.

“குடியரசுக் கட்சியினருக்கு வாக்களியுங்கள்; அப்போதுதான் வரும் தலைமுறைகளுக்கு உலகையே பின்னுக்குத் தள்ளி நாம் முன்னணியில் திகழ முடியும்.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்