ஐரோப்பா

திமிங்கல வேட்டை தடை – சட்டமூலத்தை தாக்கல் செய்ய தயாராகும் ஐஸ்லாந்து

  • September 10, 2026
  • 0 Comments

ஐஸ்லாந்து அரசாங்கம் திமிங்கல வேட்டையைத் தடை செய்யும் சட்டமூலத்தை வரும் பெப்ரவரி மாதம் சமர்ப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், வணிக ரீதியான திமிங்கல வேட்டையைத் தொடரும் உலகின் இரண்டு நாடுகளாக நோர்வே மட்டும் ஜப்பான் ஆகிய நாடுகளே எஞ்சியிருக்கும். ஐஸ்லாந்தில் திமிங்கல வேட்டையானது, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் ஹொலிவுட் பிரபலங்களிடமிருந்து பல ஆண்டுகளாகப் போராட்டங்களைத் தூண்டியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நடப்பு அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் உள்ளதால், சட்டமூலம் நிறைவேறும் […]

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு: கூட்டத்தை புறக்கணித்த எம்.பிக்கள் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு: கூட்டத்தை புறக்கணித்த எம்.பிக்கள்

  • September 10, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று புறக்கணித்தனர். நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான தீவிரத்தையும் அவசரத்தையும் தெரிவுக்குழு வெளிப்படுத்தத் தவறி வருவதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் நிஷாம் காரியப்பர் ஆகிய நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இன்றைய கூட்டத்தில், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் […]

ஐரோப்பா

இளவரசி டயானாவின் பழிவாங்கும் உடை ஏலத்திற்கு வருகிறது

  • September 10, 2026
  • 0 Comments

மறைந்த இளவரசி டயானா 1994-ல் அணிந்திருந்த “பழிவாங்கும் உடை”, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக சோதேபிஸ் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வந்துள்ளது. கிரேக்க வடிவமைப்பாளர் கிறிஸ்டினா ஸ்டாம்போலியன் வடிவமைத்த இந்த உடை டிசம்பர் 9 அன்று விற்பனைக்கு வரும். இவ் உடையானது £220,000 (S$377,050) வரை விலை பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1994 ஜூன் மாதம், நிதி திரட்டும் இரவு விருந்திற்காக லண்டனில் உள்ள செர்பன்டைன் கேலரிக்கு வந்தபோது டயானா இந்த உடையை அணிந்திருந்தார். இந்த […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் M4 நெடுஞ்சாலையின் முக்கிய சந்திப்புகள் மூடல்

  • September 10, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் M4 நெடுஞ்சாலையின் J8/9 மற்றும் J10 சந்திப்புகளுக்கு இடையே இரு திசைகளும் மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகள் கிழக்கு அமைப்பு, இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதற்கமைய வாகன ஓட்டிகள் “20 நிமிட தாமதங்களையும்”  போக்குவரத்து நெரிசல்களையும் எதிர்கொள்வார்கள் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் “பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு” தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பு   கேட்டுக்கொண்டுள்ளது.  

இலங்கை இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இந்தியா இலங்கை செய்தி

இலங்கை இராணுவத்திற்கு AI ஆய்வகத்தை அமைக்கவுள்ள இந்தியா

  • September 10, 2026
  • 0 Comments

இலங்கை இராணுவத்திற்காக இந்தியா செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள, இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ் உதயகிரியில் நேற்றிரவு இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே,இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எதிர்காலத்தில் இலங்கை ஆயுதப் படைகளின் திறன்களை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இலங்கை இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்காக, இந்த செயற்கை நுண்ணறிவு […]

ஐரோப்பா

கேட்விக் விமான நிலைய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு – சேவைகள் தடைபட வாய்ப்பு

  • September 10, 2026
  • 0 Comments

கேட்விக் விமான நிலையத்தில் 220-க்கும் மேற்பட்ட உதவிப் பயணப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதியப் பிரச்சினை காரணமாக அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுனைட் தொழிற்சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தம், செப்டம்பர் 17 முதல் 21 வரையிலும், செப்டம்பர் 23 முதல் 26 வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. நிறுவனம் வில்சன் ஜேம்ஸ் வழங்கிய, 3.4 சதவீத ஊதிய உயர்வை உள்ளடக்கிய இரண்டு ஆண்டு கால சலுகையை தொழிற்சங்க உறுப்பினர்கள் ஒருமனதாக நிராகரித்துள்ளனர். இந்நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் […]

ஐரோப்பா

இலக்கை மாற்றிய ரஷ்யா – பற்றி எரிந்த உக்ரைனின் பெட்ரோல் நிலையம்

  • September 10, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள பெட்ரோல் நிலையத்தை ரஷ்ய படைகள் முதன் முறையாக தாக்கியுள்ளனர். இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்ததாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ  Vitali Klitschko தெரிவித்துள்ளார். அத்துடன் தீ விபத்தால் வாகனம் ஒன்று சேதமடைந்ததுடன், அருகில் இருந்து கட்டிடங்களுக்கும் தீ பரவியதாக அவசரகால சேவைத் துறை தெரிவித்தது. “இத்தகைய தாக்குதல்களில் எந்த இராணுவ நோக்கமும் இல்லை. இது பொதுமக்களை அச்சுறுத்தும் ஒரு பயங்கரவாதச் செயல்,” என்று பெட்ரோல் நிறுவனத்தின் தலைமை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

முதல் மடிக்கக்கூடிய (foldable) தொலைபேசியான ஐபோன் டுயோ அறிமுகம்

  • September 10, 2026
  • 0 Comments

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய (foldable) தொலைபேசியான ‘ஐபோன் டுயோ’வை (iPhone Duo) அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் டுயோ விரித்து வைக்கும்போது இதுவரை வந்ததிலேயே மிகவும் மெல்லிய ஐபோனாகத் திகழ்கிறது; இதில் இரண்டு திரைகள் உள்ளன – ஒன்று வெளிப்புறத்திலும், மற்றொன்று புத்தகத்தைப் போல விரிக்கும்போது தெரியும் பெரிய திரையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜான் டெர்னஸ், பிற நிறுவனங்களின் மடிக்கக்கூடிய தொலைபேசிகள் வெறும் இரண்டு […]

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (10.09.2026) வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இலங்கை செய்தி

சீதையம்மனை வழிபட்டார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

  • September 10, 2026
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (10.09.2026) வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சரை, ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், மஞ்சுல சுரவீர ஆராச்சி, நுவரெலியா பிரதேச […]

சவூதி அரேபியாமீது ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, 'மெக்கா ஒப்பந்தத்தின்' கீழ் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இருப்பினும் உரிய நேரம் வரும்போது பாகிஸ்தான் செயல்படும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி

சவுதிக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த களமிறங்குமா பாகிஸ்தான்?

  • September 10, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாமீது ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ‘மெக்கா ஒப்பந்தத்தின்’ கீழ் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இருப்பினும் உரிய நேரம் வரும்போது பாகிஸ்தான் செயல்படும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே அண்மையில் கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இஸ்லாமாபாத் எவ்வாறு தனது கடமைகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது என்று எழுப்பப்பட்ட […]