இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இலங்கை செய்தி

இலங்கைவந்த கையோடு ஜே.வி.பி. செயலரை சந்தித்தார் சீனத் தூதுவர்

  • September 1, 2026
  • 0 Comments

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் நடந்த சந்திப்பின்போது, ​​இலங்கை-சீனா இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது, அதிக சீன முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வறுமை ஒழிப்பில் ஒத்துழைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையில் முதலீட்டை அதிகரிக்க சீன முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், வறுமை ஒழிப்பில் சீனாவின் அனுபவம் சிறிலங்காவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை […]

ஐரோப்பா

நோர்வேயின் அரச குடும்ப வாரிசான ஹோய்பி வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதி

  • September 1, 2026
  • 0 Comments

நோர்வேயின் ராணி மெட்டே-மாரிட்டின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி Borg Høiby, வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கிற்கு முந்தைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அவருக்கு இந்த தற்காலிக விடுதலை வழங்கப்பட்டுள்ளது. ஓஸ்லோவில் உள்ள அரச அரண்மனையில், இருந்து மன்னர் ஹரால்டின் உடலம் அரண்மை தேவாலயத்திற்கு இன்று கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. இதற்காக அரச குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுக்கூடினர். இந்நிலையில் அவர்களுடன் ஒன்றிணைய மரியஸ் போர்க் ஹோய்பிக்கு வீட்டுக் காவலில் இருந்து வெளியேற அனுமதி […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு நெருக்கடி : IMF மற்றும் EUவின் நிதியை பெற முட்டுக்கட்டை, முக்கிய சட்டமூலம் தோல்வி

  • September 1, 2026
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய (EU) நிதிகளைப் பெறுவதற்குத் தேவையான, வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் உக்ரைனின் ஆளும் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. இது தொடர்பான சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியுள்ளது. சட்டமூலம் நிறைவேற அரசாங்கத்திற்கு 226 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 194 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர் அல்லது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவில்லை என்பது தொடர்பான மேலதிக […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் ஸ்டாமர் – வெளியான முக்கிய அறிவிப்பு

  • September 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெயர் ஸ்டாமர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக முடிவு செய்ததைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வெஸ்ட்மின்ஸ்டரில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஹவுஸ் ஆஃப் காமன்ஸை House of Commons  விட்டு வெளியேற இதுவே “சரியான நேரம்” என்று அவர் கூறியுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்டாமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து லண்டனில் உள்ள அவரது தொகுதியான ஹோல்போர்ன் Holborn  மற்றும் செயின்ட் பான்கிராஸில்  St Pancras தற்போது ஒரு […]

ஐரோப்பா

இராணுவத்தினருக்கு அச்சுறுத்தல் – காசாவை தொடர்ந்து தாக்கும் இஸ்ரேல்

  • September 1, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல்  மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வான்வழித் தாக்குதல்களில் மூ  குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். காசா நகரின் மேற்கில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் நிறைந்த பகுதியான கதிபா அருகே, இன்று இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இஸ்ரேல் குறைந்தது 12 ஏவுகணைகளை வீசியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அசாதாரணமான கடுமையான குண்டுவீச்சில், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் […]

ஐரோப்பா

இராஜதந்திர விரிசல்களுக்கு மத்தியில் பிரித்தானியாவிற்கான புதிய தூதரை நியமிக்கும் ரஷ்யா

  • September 1, 2026
  • 0 Comments

பிரித்தானியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்து வருகின்ற போதிலும் உரிய நேரத்தில் புதிய தூதரை அறிவிப்பதாக மொஸ்கோ கூறியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்த ஆண்ட்ரி கெலின், கடந்த ஜுலை மாதம் பிரித்தானியாவில் இருந்து வெளியேறினார். உக்ரைனின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒன்றாக லண்டன் இருப்பதால், இருநாட்டு உறவுகள் மோசமடைந்து வருகின்றன. பதட்டங்களை மேலும் அதிகரிக்கும் விதமாக பிரித்தானியா மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தப்போவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் பிரித்தானியாவின் முக்கியநகரங்கள் ரஷ்யாவின் தாக்குதல் […]

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

  • September 1, 2026
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக கண்டறியப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு ஏழு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், நீண்ட விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி முகமட் மிஹால் இந்தத் தண்டனையை விதித்தார். 2014-ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மே தினப் பேரணியில் பங்கேற்ற அரசியல் ஆதரவாளர்களுக்கு உணவு வழங்குவதற்காக, அரசாங்கத்திற்குச் சொந்தமான சிறிலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் […]

ஐரோப்பா

உக்ரைன் தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்

  • September 1, 2026
  • 0 Comments

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரஷ்யா இன்று நடத்திய தாக்குதல்களில் 04 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும்  பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆறாவது நாளாக தொடர் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது, மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இன்று அதிகாலை வேளையில் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் வான்வழித் தாக்குதல்களுக்கான  எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர்களான […]

உலகம்

அமெரிக்கத் தடைகளுக்கு சவால் செய்யும் ஈரானின் பொருளாதாரம்

  • September 1, 2026
  • 0 Comments

அமெரிக்கத் தடைகள் இருந்தபோதிலும் ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பு உள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் அப்தோல்நசர் ஹெம்மாட்டி Abdolnaser Hemmati தெரிவித்துள்ளார். பொருளாதாரப் போரில் தோல்வியடைந்து வருவதால் தெஹ்ரான் ஆக்ரோஷமாகச் செயல்படுவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் அமெரிக்க அதிபரிடம் கூறுகிறேன்: ஈரானிடம் (அந்நியச் செலாவணி) உள்ளது. அது போதுமானதாகவும் இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அவற்றின் விவரங்களை வெளியிட முடியாது என்றும் அவர் மேலும் கூறினார். பொருளாதார […]

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை இலங்கை செய்தி

பிள்ளையானுக்கு மறியல் நீடிப்பு: லண்டனிலுள்ள சந்தேகநபருக்கு பிடியாணை

  • September 1, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி […]