இலங்கை செய்தி

யாழில் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி சேதம்

யாழ். தெல்லிப்பளையில், வல்லை - அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை இனந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.

யாழ். தெல்லிப்பளையில், வல்லை – அராலி வீதியில் இருக்கும் தென் இந்தியத் திருச்சபை இடுகாட்டில் அமைக்கப்பட்டிருந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபியை இனந்தெரியாதோர் இடித்துச் சேதமாக்கியுள்ளனர்.

தந்தை செல்வா குடும்பத்தவரது பரம்பரை இடுகாட்டில் இருந்த தூபியின் மேல் பகுதியே சூறையாடப்பட்டுள்ளது.

போரின் பின்னர் தெல்லிப்பளை பிரதேசம் விடுவிக்கப்பட்டபோது அங்கு போரின் முன்னர் இருந்த தூபியை ஒத்த தூபி ஒன்று 2012 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டது.

இவ்வாறு புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் தூபியே நேற்றுமுன்தினம் மாலை இனந்தெரியாதோரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அயலவர்களால் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தூபியின் மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க அலங்கார வடிவப் பொருள்களை அபகரிக்கும் நோக்கில் இந்தச் சூறையாடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை