ஐரோப்பா

உக்ரைனுக்கு நெருக்கடி : IMF மற்றும் EUவின் நிதியை பெற முட்டுக்கட்டை, முக்கிய சட்டமூலம் தோல்வி

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றிய (EU) நிதிகளைப் பெறுவதற்குத் தேவையான, வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதில் உக்ரைனின் ஆளும் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

இது தொடர்பான சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவியுள்ளது.

சட்டமூலம் நிறைவேற அரசாங்கத்திற்கு 226 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 194 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர் அல்லது கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவில்லை என்பது தொடர்பான மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.

இதேவேளை பாதுகாப்புத் தேவைகளுக்காக உக்ரைன் 27 பில்லியன் டொலர் பற்றாக்குறையை  எதிர்கொள்வதாகவும், நிதி அபாயங்கள் அதிகரித்து வருவதாகவும் பிரதமர் செர்ஜி கொரெட்ஸ்கி Sergii Koretskyi  கூறியுள்ளார்.

இந்நிலையில் முக்கிய சீர்திருத்தச் சட்டங்கள் மீதான வாக்கெடுப்பை விரைவுபடுத்துமாறு அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே உக்ரைனின் கடன் வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்புக் குழு ஒன்று இந்த வாரம் உக்ரைனைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்