ஐரோப்பா முக்கிய செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் ஸ்டாமர் – வெளியான முக்கிய அறிவிப்பு

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கெயர் ஸ்டாமர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக முடிவு செய்ததைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டரில் 11 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஹவுஸ் ஆஃப் காமன்ஸை House of Commons  விட்டு வெளியேற இதுவே “சரியான நேரம்” என்று அவர் கூறியுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்டாமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து லண்டனில் உள்ள அவரது தொகுதியான ஹோல்போர்ன் Holborn  மற்றும் செயின்ட் பான்கிராஸில்  St Pancras தற்போது ஒரு சிறப்புத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015-ல் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்பு, பொது வழக்குகள் இயக்குநராக பொதுத்துறையின் முன்னணி வழக்கறிஞராக இருந்த ஸ்டார்மர், 2019 முதல் 2026 வரை தொழிலாளர் கட்சியை வழிநடத்தினார்.

2024-ல் நடந்த பொதுத் தேர்தலில் அவர் பெரும் வெற்றி பெற்றார், ஆனால் மக்களின் நன்மதிப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல், கருத்துக் கணிப்பு மதிப்பீடுகள் சரிந்ததைத் தொடர்ந்து ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவருக்குப் பதிலாக ஆண்டி பர்னம் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்