அனோஜனுக்கு மன்னிப்புகோரி மூவின மக்களும் ஒன்றிணைந்து வவுனியாவில் போராட்டம்
சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி, தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் உள்ளிட்ட மூவினத்தவரும் இணைந்து வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் மற்றும் நடைபவனியை முன்னெடுத்தனர். இதன்போது பொதுமக்களிடமிருந்து விசேட கையெழுத்துகளும் சேகரிக்கப்பட்டன. வவுனியா கந்தசாமி ஆலயத்தில் அனோஜனின் விடுதலை வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் பௌத்த மதத் தலைவர்களின் பங்கேற்புடன் அங்கிருந்து ஆரம்பமான நடைபவனி […]













