ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளது: ஈரான் திட்டவட்டம்
ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மையின் கீழ் உள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) துணை அமைப்பான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி Hojjatoleslam Hossein Taeb) தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் உள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
“ஹோர்முஸ் நீரிணையானது இன்று இஸ்லாமியக் குடியரசின் (ஈரான்) மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை பார்க்கிறீர்கள். நமது நாடு முழுமையான பாதுகாப்புடன் தன் பாதையில் தொடர்ந்து செல்கிறது” என்று Hossein Taeb கூறியுள்ளார்.
மேலும், இஸ்லாமியப் புரட்சியின் ஆற்றலை அமெரிக்கர்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




