ICE அதிகாரிகளுக்கு மின் அதிர்ச்சி கையுறைகளை வழங்க திட்டம்
அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க முகமை (ICE), களத்தில் உள்ள அதிகாரிகளுக்காக மின் அதிர்ச்சி கையுறைகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கவலையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ICE-இன் ஒரு அங்கமான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (Department of Homeland Security) இணையதளத்தில் உள்ள குறிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ட்ரம்ப் நிர்வாகம் சுமார் 20 மில்லியன் டொலர் வரை செலவிடவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மின் அதிர்ச்சி கையுறைகள், ஒரு தனிநபரின் பதிலளிக்கும் திறனைக் குலைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
உள்நாட்டுப் பாதுகாப்பு புலனாய்வு மற்றும் அமலாக்க வெளியேற்ற நடவடிக்கைகளின் (Homeland Security Investigations and Enforcement Removal Operations) அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கடத்தும் கவனச்சிதறல் மற்றும் பதற்றத் தணிப்பு சாதனம் (Conductive Distraction and De-escalation Device) என்று இந்தக் கையுறைகளை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை விவரித்துள்ளது.
இந்த கையுறைகள் கொடிய வலியை ஏற்படுத்தும் ஒரு மறைமுக சாதனமாகும்.




