ஐரோப்பா

பிரெஞ்சு தூதரகத்தின் இரு ஊழியர்கள் ஈரானுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு

  • August 17, 2026
  • 0 Comments

பிரெஞ்சு தூதரகத்தின் இரு ஊழியர்கள் ஈரானுக்குள் மீளவும் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தூதரகங்களின் விதிகள் மற்றும் சலுகைகளை வரையறுக்கும் வியன்னா உடன்படிக்கையை மீறி, ஈரானிய குடிமைச் சமூகத்திற்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் விளக்கமளித்துள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி Esmaeil Baghaei இன்று இதனை அறிவித்துள்ளார். மேற்கத்தேய நாடுகள் தனது உள்விவகாரங்களில் தலையிடுவதாக ஈரான் நீண்டகாலமாக குற்றம் சாட்டி வருகிறது. இதற்கிடையே பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஓமான்மீது தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

  • August 17, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஓமான் இடையூறாக இருந்தால், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பொக்ஸ் நியூஸ் (Fox News) அலைவரிசைக்குத் திங்கள்கிழமை அளித்த நேர்காணலின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். “ஓமான் குறுக்கே நின்றால், அவர்கள் மீது மிகக் கடுமையான குண்டுவீச்சு நடத்துவோம்” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே நீண்டகாலமாக ராஜதந்திர தூதராகவும் உத்திபூர்வ பங்காளியாகவும் […]

இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது 350-வது விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

350 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவீந்திர ஜடேஜா புதிய சாதனை

  • August 17, 2026
  • 0 Comments

இலங்கை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் தனது 350-வது விக்கெட்டைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். இலங்கை அணியின் கேசர நுவந்துவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 37 வயதான ஜடேஜா, பல்வேறு வரலாற்றுச் சாதனைகளையும் தனது வசமாக்கியுள்ளார். முதல் இந்திய இடதுகை பந்துவீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட் […]

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (17.08.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

யாழில் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: ஆளுநர் தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

  • August 17, 2026
  • 0 Comments

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஒழுங்குமுறையுடன் முன்னெடுப்பது தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (17.08.2026) திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. காணாமல் ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் இவ்வாண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு தொடர்பிலும், அதனுடன் இணைந்த ஏற்பாடுகள் […]

ஐரோப்பா

போர்களத்தில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புக்களை இழந்த ரஷ்யா – மார்த்தட்டும் உக்ரைன்

  • August 17, 2026
  • 0 Comments

ரஷ்யா போரில் கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 42,860 உயிரிழப்புகளை சந்தித்ததாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே காலகட்டத்தில்,  மிகப்பெரிய நிலப்பரப்பு வெற்றிகளைப் பெற்றதாக உக்ரைன் கூறுகிறது. தெற்கு முனையில் தங்கள் படைகள் கிட்டத்தட்ட 300 சதுர மைல்களையும் 26 குடியிருப்புகளையும் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக கீவ் கூறுகிறது. அதேநேரம் ரஷ்யப் படைகள் முன்னணிப் பகுதியின் சில இடங்களில் ஏழு மைல்களுக்கும் மேலாகப் பின் தள்ளப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய இராணுவத்தின் மொத்த உயிரிழப்புகள் இப்போது 1.5 […]

உலகம்

ஈரான் எந்த வகையிலும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது – ட்ரம்ப் எச்சரிக்கை

  • August 17, 2026
  • 0 Comments

ஈரான் எந்த வகையிலும் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல்’ தளத்தில் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கையெழுத்திடப்பட்ட 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம், நிரந்தர அமைதி ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாமல் அதன் காலாவதி திகதியை எட்டியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான முற்றுகையைக் கையாள்வதோடு, ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதை அசல் […]

உலகம்

லாலா சூறாவளி எதிரொலி – ஹவாயில் மின்துண்டிப்பு

  • August 17, 2026
  • 0 Comments

லாலா சூறாவளி காரணமாக நேற்றைய தினம் ஹவாய் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 180,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாநில அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தினர். இதேவேளை இன்று அதிகாலை புயல் கரையை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சில மாநிலங்களில் எச்சரிக்கைகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

ஐரோப்பா

ஸ்டாஃபோர்ட்ஷயரில் கோர விபத்து – M6 நெடுஞ்சாலை மூடல்

  • August 17, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட்ஷயரில் Staffordshire  மூன்று கனரக வாகனங்கள் மற்றும் கார் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக  ஸ்டாஃபோர்ட்ஷயரில் உள்ள M6 வடக்கு நோக்கிய சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை இன்று பிற்பகல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாஃபோர்ட்ஷயர் காவல்துறை Staffordshire Police , வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் West Midlands  ஆம்புலன்ஸ் சேவை, ஸ்டாஃபோர்ட்ஷயர் Staffordshire  தீயணைப்பு மற்றும் மீட்புப் […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சார வரித் திட்டத்திற்கு ஜெர்மனி எதிர்ப்பு

  • August 17, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சார வரித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜேர்மனி, இந்த திட்டம்  தேசிய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளது. அதிகரித்த மின்சார விலைகளுக்கு மத்தியில், பிரஸ்ஸல்ஸ் தனது தொழில், போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறைகளை மின்மயமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய வரி நடவடிக்கைகளுக்குப் பாரம்பரியமாகத் தேவைப்படும் ஒருமித்த கருத்துக்குப் பதிலாக, தகுதிவாய்ந்த பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு சட்டக் கருவி மூலம் இந்த திட்டத்தை அமுல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் முயல்கிறது என்று […]