திரிபோலியில் 09 புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு – தொடரும் தேடுதல் வேட்டை
லிபிய தலைநகர் திரிபோலியின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் 09 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபோலியிலிருந்து சுமார் 22 கி.மீ (14 மைல்) தொலைவில் உள்ள தஜூராவிலிருந்து Tajoura உடல்கள் மீட்கப்பட்டதாக, செஞ்சிலுவைச் சங்கக் கிளை தெரிவித்துள்ளது.
படகில் சுமார் 19 பேர் பயணம் செய்ததால், மேலும் பல உடல்கள் கரை ஒதுங்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்வதாகவும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.




