லண்டனில் பேருந்து ஓட்டுநர்கள் பணிப்புறக்கணிப்பு – முழுமையான தகவல் இதோ
பிரித்தானியாவின் லண்டனில் 1500 பேருந்து ஓட்டுநர்கள் இந்த வாரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடும் வெப்பமான காலநிலையில் நிலவும் பணிச்சூழல் காரணமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
யுனைட் தொழிற்சங்க உறுப்பினர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று காலை 4 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 21, வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணி வரை விட்டுவிட்டு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பின்வரும் சேவைகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
19, 29, 34, 41, 66, 67, 76, 102, 103, 121, 141, 149, 150, 158, 175, 191, 192, 217, 221, 243, 248, 254, 259, 279, 307, 313, 329, 341, 349, 370, 375, 377, 616, 675, SL1, SL2, W3, W4, W6, N19, N29, N41, N279.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யுனைட் பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாம் Sharon Graham, “எந்தவொரு தொழிலாளியும் தங்கள் வேலையால் நோய்வாய்ப்படக்கூடாது. இந்தப் பிரச்சினை ஆண்டுதோறும் எழுப்பப்படுகிறது, மேலும் கோடைக்காலம் வெப்பமடைவதால், இதை இனிமேலும் மூடிமறைக்க முடியாது.” என்றார்.




