நைஜீரியாவில் நள்ளிரவில் குடியிருப்புவாசிகள் மீது தாக்குதல் -25 பேர் பலி
நைஜீரியாவின் மத்திய பிளாட்டோ மாநிலத்தில் உள்ள கிராமமொன்றின் மீது நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக மாநில அதிகாரிகளும், குடியிருப்புவாசிகளும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், பிளாட்டோ மாநிலத்தில் நிலவும் தொடர்ச்சியான பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டுகிறது.
அங்கு விவசாய சமூகங்களுக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையிலான பதட்டங்கள் பெரும்பாலும் பழிவாங்கும் வன்முறையாக மாறி, மக்கள் இறப்பதற்கும், இடம்பெயர்வதற்கும், வீடற்றவர்களாக ஆவதற்கும் காரணமாகின்றன.
தாக்குதல் நடத்தியவர்கள் வீடு வீடாகச் சென்று, அரிவாள்களால் குடியிருப்பாளர்களைக் கொன்றதாகவும், பெரும்பாலும் குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியின் கவுன்சிலரான லெமுன் லீ’ஆன் இலியா Lemun Le’an Iliya குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிளாட்டோ காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஆல்ஃபிரட் அலாபோ Alfred Alabo , அப்பகுதிக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டு வருவதாகவும், நிலைமையை மதிப்பிட்ட பிறகு அறிக்கை வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.




