ஐரோப்பா

லண்டனில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் பாரிய தீ விபத்து

தென்கிழக்கு லண்டனின் டெப்ட்ஃபோர்டில் Deptford கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 100 தீயணைப்பு வீரர்களும் 15 தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

லேண்ட்மேன் வேயில் Landmann Way உள்ள ஒரு மறுசுழற்சி நிலையத்தில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புக் குழுவினர், தீயை அணைப்பதற்காக உயரமான சுழலும் ஏணிகளை நீர் கோபுரங்களாகப் பயன்படுத்தினர். இதனால் அந்த நிலையம் கடுமையாகச் சேதமடைந்தது.

அதிகப்படியான புகை காரணமாக, அப்பகுதி மக்கள் தங்கள் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதே நேரத்தில், லண்டன் பிரிட்ஜிற்குச் செல்லும் ரயில் பாதைகள் மூடப்பட்டன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.விசாரணைகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்