ஐரோப்பா

ஈரானுக்கு பதிலடி – தூதர்களை வெளியேற்றும் பிரான்ஸ்

தெஹ்ரானில் இருந்து இரண்டு பிரெஞ்சு தூதர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பதிலடியாக பிரான்ஸில் இருந்து இரு ஈரானிய தூதர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எக்ஸ் தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் , இந்த சகிக்க முடியாத செயலுக்கு விளைவுகள் இருக்கும் என்று நான் அறிவித்திருந்தேன். அதன்படியே நடந்துள்ளது. பிரான்சில் உள்ள இரண்டு ஈரானிய தூதர்கள் மிக விரைவில் வெளியேற்றப்படுவார்கள்,”  எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு சேவைகளால் பிரெஞ்சு தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டு, உடல்ரீதியாக அச்சுறுத்தப்பட்டதாக பிரெஞ்சு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாரிஸில் உள்ள ஈரானிய தூதரகப் பொறுப்பாளரை பாரோட் வரவழைத்திருந்தார்.

இந்நிலையில் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் ஈரானுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்