இலங்கை செய்தி

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் EHang நிறுவனத்தினால் இந்த ட்ரோன் சேவை செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார்.

முதல் கட்டத்தின் கீழ் கொழும்பில் இருந்து தெற்கு கடற்கரை பிரதேசத்திலுள்ள இடங்கள் வரையிலும் கட்டுநாயக்கவில் இருந்து துறைமுக நகரம் வரையிலும் ட்ரோன் சேவை முன்னெடுக்கப்படுமென அவர் கூறினார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், அவசர அனர்த்த சேவைகளுக்காக பயன்படுத்துதல் மற்றும் கடல்சார் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ட்ரோன் சேவை அறிமுகம் செய்யப்படுவதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பிரதான கட்டுப்பாட்டு அறையிலிருந்து ட்ரோன்கள் தானியக்க முறையில் இயக்கப்படுவதுடன், அதற்காக செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை