இலங்கை

கிரிஷ் ஒப்பந்தம் – நாமலின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

  • July 7, 2026
  • 0 Comments

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை  நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இநத வழக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பும் நடைமுறையின் கீழ், இந்த வழக்கில் இரண்டு இந்திய தேசிய சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வேளையில், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் குறைந்தபட்சம் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியின் பயணத்துக்கு மத்தியில் சிரியாவில் குண்டு வெடிப்பு

  • July 7, 2026
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , சிரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள வேளையில், அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸில் குறைந்தபட்சம் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன. செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்த இக்குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, நகரின் வான்பரப்பில் அடர்ந்த புகைமூட்டம் எழும்புவதைக் காட்டும் வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. தலைநகர் டமாஸ்கஸில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஒரு பகுதியிலேயே இந்த வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக சிரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனை ஒரு “குற்றச்செயல்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதில் பொதுமக்கள் […]

உலகம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் பொலிஸார் மோதல் -09 பேர் பலி

  • July 7, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் நேற்று இரவு முழுவதும் இடம்பெற்ற மோதலில் 09 பாகிஸ்தான் பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஜியாரத் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாக ஜியாரத் துணை ஆணையர் அப்துல் குத்தூஸ் அச்சாக்சாய் (Ziarat Abdul Quddus Achakzai) தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொல்லப்பட்ட காவலர்களின் உடல்கள் […]

ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தனது நாட்டைப் பாதுகாக்க, தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, நேட்டோ (NATO) நாடுகளிடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உடன் வேண்டும்: நேட்டோவிடம் உக்ரைன் அவசரக் கோரிக்கை

  • July 7, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் தீவிரமடைந்து வரும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தனது நாட்டைப் பாதுகாக்க, தேவையான வான் பாதுகாப்பு அமைப்புகளை உடனடியாக வழங்குமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, நேட்டோ (NATO) நாடுகளிடம் வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார். துருக்கியில் நடைபெறும் நேட்டோ மாநாட்டில் அவர் இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய இருவேறு ஏவுகணைத் தாக்குதல்களில், குடியிருப்பு வளாகங்கள் தரைமட்டமாக்கப்பட்டு 50-இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜெலென்ஸ்கியின் இந்த உதவிக்கான குரல் […]

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 3 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெறவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்- நாடாளுமன்றில் இன்று அனல் பறக்கும் விவாதம்

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 3 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய விவாதம் நடைபெறுகின்றது. மேற்படி விவாதத்துக்கு எதிர்க்கட்சி தலைவர், 4 மணித்தியாலங்களை கோரி இருந்தாலும், ஆளுங்கட்சியால் 3 மணிநேரமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை, சிறைச்சாலை மோதல் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது என்று சபாநாயகர் தெரிவித்தார்.  

உலகம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு சிறை தண்டனை – ஆசிய நாடொன்றில் பரிந்துரை

  • July 7, 2026
  • 0 Comments

சிங்கப்பூரில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது, இதற்கமைய வாகன ஓட்டுநர்களுக்கான மது வரம்பு பாதியளவுக்கும் மேலாகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்குக் கூட, அவர்களின் இரத்தத்தில் மதுவின் அளவு மிக அதிகமாக இருந்தால், சிறைத் தண்டனையைப் பரிந்துரைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. மத்திய உள்துறைக்கான மூத்த இணை அமைச்சர் சிம் ஆன், தற்போதுள்ள 35 மைக்ரோகிராம் (mcg) என்ற மதுவின் வரம்பை […]

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை செய்தி

சிறைச்சாலை கலவரம்: பலி எண்ணிக்கை உயர்வு

  • July 7, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களில் காயமடைந்து, நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. சிறைச்சாலையில் வெடித்த வன்முறையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல கைதிகளில், தற்போதைய பலியானவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் தகவல்படி, இதுவரை உயிரிழந்தவர்களில் ஏழு சிறைச்சாலை அதிகாரிகளும், 20 கைதிகளும் அடங்குகின்றனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு […]

" சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” அரசியல் இலங்கை செய்தி

சட்டத்தின் சுயாதீனத்தில் கையடிப்பு: எதிரணி குற்றச்சாட்டு

  • July 7, 2026
  • 0 Comments

” சட்டத்தின் சுயாதீனத்தன்மைக்குள் அரசியலை புகுத்தி, ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.சட்டத்தின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க எதிரணியால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சூளுரைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “இலங்கையை ஆட்சிசெய்த தலைவர்கள் சட்டத்தின் சுயாதீனத்தன்மையில் கையடிக்கவில்லை. அவ்வாறு கையடித்த தரப்பினருக்கு கடைசியில் வீட்டுக்கு செல்ல நேரிட்டது. நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் […]

ஐரோப்பா செய்தி

புதிய ஆட்சி மலர்ந்த பின் சிரியா சென்ற முதல் ஐரோப்பிய தலைவர்

  • July 7, 2026
  • 0 Comments

சிரியாவில் ஜனாதிபதி அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் , 2024-ல் பஷர் அல்-அசாத்தின் (Bashar al-Assad) சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய பிறகு, அங்கு செல்லும் முதல் ஐரோப்பிய தலைவர் என்ற பெருமையுடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் திங்கள்கிழமையன்று டமாஸ்கஸ் சென்றடைந்தார். 13 ஆண்டுகால உள்நாட்டுப் போரினால் சின்னாபின்னமான சிரியாவை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில், அசாத் காலத்தில் சிரியாவைத் தனிமைப்படுத்திய மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் ஜனாதிபதி ஷாரா நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளார். […]

உலகம்

சீனாவில் நிலச்சரிவு – 17 பேர் மண்ணுள் புதையுண்டுள்ளனர்

  • July 7, 2026
  • 0 Comments

சீனாவின் மேற்கு மாகாணமான கான்சுவில் (Gansu) இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 33 பேர் மண்ணுள் புதையுண்டதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் 17 பேர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள 16 பேரை மீட்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செங்குத்தான பள்ளத்தாக்குகள் மற்றும் குறுக்கிடும் ஆறுகளைக் கொண்ட இந்த மலைப் பிரதேசம், குறிப்பாக மழைக்காலங்களில், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளுக்கு இலக்காகுகின்றமை குறிப்பிடத்தக்கது. […]