கிரிஷ் ஒப்பந்தம் – நாமலின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இநத வழக்கு கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பும் நடைமுறையின் கீழ், இந்த வழக்கில் இரண்டு இந்திய தேசிய சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




