உலகம்

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் பொலிஸார் மோதல் -09 பேர் பலி

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுடன் நேற்று இரவு முழுவதும் இடம்பெற்ற மோதலில் 09 பாகிஸ்தான் பொலிஸார் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஜியாரத் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்கு பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாக ஜியாரத் துணை ஆணையர் அப்துல் குத்தூஸ் அச்சாக்சாய் (Ziarat Abdul Quddus Achakzai) தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்ட காவலர்களின் உடல்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் தடைசெய்யப்பட்ட பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், அப்பகுதியில் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்