உலகம்

ஈரானின் இராணுவத்தை அழித்ததாக ட்ரம்ப் பெருமிதம்!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரானின் இராணுவம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஈரான் தனது அசல் ஏவுகணை ஆயுதக் கிடங்கில் “சுமார் 21 அல்லது 22 சதவிகிதத்தை” மட்டுமே தற்போதை வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதற்கிடையே தனது வளைகுடா நட்பு நாடுகளை இலக்காகக் கொண்ட ஆறு ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும், மற்றொரு ஏவுகணை அதன் இலக்கை அடையத் தவறியதாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி விளையாட்டு

ஈரான் அணி நிர்வாகிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு

  • June 6, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ணக் கால்பந்து தொடரில்   பங்கேற்கவுள்ள ஈரான் தேசிய கால்பந்து அணியின் முக்கிய பின்னணி நிர்வாகிகளுக்கு (Backroom staff) விசா வழங்க அமெரிக்கா மறுத்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரான் வீரர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் உறுதிப்படுத்திய சில மணித்தியாலங்களிலேயே இந்த புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஜூன் 15ஆம் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெறவுள்ள ஈரானின் முதலாவது போட்டிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, நேற்று வெள்ளிக்கிழமை […]

ஐரோப்பா

ஹென்றி நோவாக்கின் கொலை வழக்கு : கலவரங்களில் ஈடுபட்ட மேலும் 06 பேர் கைது!

  • June 6, 2026
  • 0 Comments

ஹென்றி நோவாக்கின் கொலை வழக்கில் விக்ரம் திக்வாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்களில் வன்முறையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டின் பெயரில் மேலும் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து கலவரம் தொடர்பாக இதுவரை  11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி புதிதாக கைது செய்யப்பட்ட 06 பேரும் இன்று சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர். ஹென்றி நோவாக் இறக்கும் தருவாயில் இருந்தபோது அவருக்கு கைவிலங்கிடப்பட்ட சம்பவம் பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

யாழ். சங்கவேலி கொலை: இரு சந்தேகநபர்கள் கைது!

  • June 6, 2026
  • 0 Comments

யாழ். சங்குவேலிப் பகுதியில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். அத்துடன், கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் ஒரு பகுதியும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கை வந்து, சங்குவேலியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த 67 வயதுடைய முதியவரே இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். கடந்த மே மாதம் […]

இலங்கை

தோல்வி பயம் : மாகாணசபை தேர்தல் விடயத்தில் சஜித் குற்றச்சாட்டு!

  • June 6, 2026
  • 0 Comments

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளால் பீதியடைந்துள்ள ஆளும் அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடனான கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  அரசாங்கம் தற்போது பொதுமக்களை எதிர்கொள்ளத் தயக்கம் காட்டுவதாகவும், அதன் விளைவாக மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் தயக்கம் நிலவுவதாகவும் பிரேமதாச சுட்டிக்காட்டினார். பொதுத் தேர்தலுக்கும் அதனைத் […]

உலகம்

தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய தீவுகளில் சீனா அத்துமீறல்!

  • June 6, 2026
  • 0 Comments

தென் சீனக் கடலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளைச் சுற்றியுள்ள கடற்பரப்பில், சீனாவின் கடலோர காவல் கப்பல் ஒன்றும், ஆய்வு கப்பல் ஒன்றும் இன்று  ரோந்து சென்றதாக தைவான் குற்றம் சாட்டியுள்ளது. தைவானின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாஸ் தீவுகளில் சீனா தொடர்ந்து அத்துமீறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தெற்கு தைவானுக்கும் ஹாங்காங்கிற்கும் இடையில் உள்ள இந்தத் தீவுகள், தைவான் தீவிலிருந்து 400 கி.மீற்றருக்கும் (250 மைல்கள்)  அதிகமான தூரத்தில் இருப்பதால், சீனத் தாக்குதலுக்கு எளிதில் […]

ஐரோப்பா

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலில் குறைப்பாடு!! தாமதமாகும் பயணம்!

  • June 6, 2026
  • 0 Comments

பிரிட்டனின் மிகப்பெரிய போர்க்கப்பலான, எச்.எம்.எஸ் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (HMS Prince of Wales) கப்பலில் சிறிய தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 3.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இந்த விமானம் தாங்கி கப்பல், அட்லாண்டிக் மற்றும் உயர் வடக்குப் பகுதிகளில் பாதுகாப்பை வழங்கும் நோக்கில் புறப்பட்டிருந்தது. இந்நிலையில் நோர்வேயின் ஸ்டாவாங்கர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது தொழில்நுட்ப கேளாாறை எதிர்கொண்டதாக அதிகாரிகள் உறுதிப்படுதுதியுள்ளனர். மேற்படி கோளாறு சீரமைக்கப்பட்டவுடன் வரும் நாட்களில் கப்பல் தனது பயணத்தைத் தொடரும் என்றும் பாதுகாப்பு […]

உலகம் ஐரோப்பா செய்தி

அமெரிக்க துணை ஜனாதிபதியின் கருத்துக்கு பிரிட்டன் கடும் கண்டனம்!

  • June 6, 2026
  • 0 Comments

மாணவர் Henry Nowak கொல்லப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி , அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பிரிட்டன் குடியேற்றக் கொள்கைகளை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வான்ஸின் கருத்துக்கள் சமூகத்தில் பிளவை உண்டாக்கும் முயற்சி என சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய அரசு, வெளிநாட்டு அரசியல்வாதிகளின் தலையீட்டை வன்மையாகக் கண்டித்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் 3-ஆம் திகதி, Southampton பகுதியில் நண்பர்களுடன் இரவு நேரப் பொழுதுபோக்கை முடித்துவிட்டுத் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹென்றி நோவாக் என்ற மாணவன், Vickrum […]

உலகம்

ஈரானின் ரேடார் தளங்கள் மீதான தாக்குதல் – விளக்கமளித்த அமெரிக்கா!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரானிய கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய இராணுவ மோதல்கள், பலவீனமான போர் நிறுத்தத்தத்தையே வெளிப்படுத்துகின்றன. இது மத்திய கிழக்கை நிலைப்படுத்துவதற்கும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியூடான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்குமான முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நான்கு ஈரானிய ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாகவும், பின்னர் கோருக் மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய கடலோர […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

டிரம்பின் வர்த்தகப் போருக்கு மத்தியில் பசிபிக் பிராந்தியத்தில் முக்கிய பேச்சு !

  • June 6, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பிரதமர்களுக்கு இடையிலான வருடாந்த இருதரப்பு பேச்சு ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைந்துள்ள நூசா (Noosa) பகுதியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இரு நாடுகளும் தற்போது எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான சவால் “ஸ்திரமற்ற மற்றும் மாறிவரும் உலகச் சூழலே” என்பதை இரு தலைவர்களும் இதன்போது, ஒப்புக்கொண்டனர். மேற்படி சந்திப்புக்கு பிறகு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese , “நாம் தற்போது மிகவும் கொந்தளிப்பான ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். […]