ஈரானின் ரேடார் தளங்கள் மீதான தாக்குதல் – விளக்கமளித்த அமெரிக்கா!
ஈரானிய கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் படங்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய இராணுவ மோதல்கள், பலவீனமான போர் நிறுத்தத்தத்தையே வெளிப்படுத்துகின்றன.
இது மத்திய கிழக்கை நிலைப்படுத்துவதற்கும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியூடான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்குமான முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நான்கு ஈரானிய ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாகவும், பின்னர் கோருக் மற்றும் கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய கடலோர ரேடார் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அமெரிக்க இராணுவம் கூறியதை தொடர்ந்து மத்தியக் கிழக்கில் நேற்றில் இருந்து பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
எவ்வாறாயினும் ரேடார் தளங்கள் மீது பறந்த ட்ரோன்கள் கடல்வழிப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததாலேயே இந்த தாக்குதலை முன்னெடுத்ததாக அமெரிக்கா விளக்கமளித்துள்ளது,




