இந்தியா செய்தி தமிழ்நாடு

அண்ணாமலைக்கு தமிழகத்தில் வலுக்கிறது ஆதரவு!

  • June 6, 2026
  • 0 Comments

பாஜகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள அண்ணாமலைக்கு தமிழகத்தில் ஆதரவு வலுத்துவருகின்றது. கோவையில் அவரது ஆதரவாளர்களான பாஜகவின் மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் விலகியுள்ளனர். மற்றொரு தீவிர ஆதரவாளரான கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சந்திரசேகரும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அத்துடன், தெற்கு மாவட்டத்தில் உள்ள 22 மண்டல் தலைவர்களில் 14 பேர் விலகிய நிலையில் அவர்களுடன், பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் விலகினர். அதேவேளை, டெல்லியில் இருந்து நேற்றிரவு சென்னை திரும்பிய அண்ணாமலையை வரவேற்க, […]

அரசியல் இலங்கை செய்தி

செப்டம்பரில் இலங்கைக்கு ஆபத்து: எதிரணி எச்சரிக்கை!

  • June 6, 2026
  • 0 Comments

“எதிர்வரும் செப்டம்பர் மாதமாகும்போது இலங்கையில் பாரிய நெருக்கடி ஏற்படும். கோட்டாபய – 02 நிலைமைக்கூட தோற்றம்பெறலாம்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார். இது தொடர்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு , “டொலரைக்கூட முறையாக நிர்வாகிக்க முடியாத ஆட்சியே இது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆகும்போது பாரிய பிரச்சினையை இந்நாடு எதிர்கொள்ள நேரிடும். இதனை அநுரகுமார திஸாநாயக்கவால் நிர்வகிக்க முடியாமல்போகும். நான் இன்று […]

இலங்கை செய்தி

சொல்லிசை பாடகரை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்!

  • June 6, 2026
  • 0 Comments

சொல்லிசை பாடகர் சங்கீதன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை (06) கிளிநொச்சி மாவட்ட பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்களின் அவலங்களையும், தியாகங்களையும், வீரத்தையும், வாழ்வியலையும் தனது சொல்லிசை மூலம் பாடலாக பாடி வந்த இஞைளன் சாவகச்சேரி பொலிஸாரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை ஒட்டுமொத்த தமிழ் படைப்பாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சியில் குறித்த இச் சம்பவத்திற்கு […]

உலகம்

அணு ஆயுதக் கடற்படையை உருவாக்கும் கிம் – சீன ஜனாதிபதியின் வருகைக்கு முன் ஆய்வு!

  • June 6, 2026
  • 0 Comments

அணு ஆயுதக் கடற்படையை உருவாக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்துவதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் உறுதியளித்துள்ளார். திறன் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 5,000 டன் எடை கொண்ட ‘காங் கோன்’ என்ற போர்க்கப்பலை கிம் பார்வையிட்டதாக கூறப்படுகிறது. இதன்போது கருத்து வெளியிட்ட கிம், “நாட்டின் அணு ஆயுதத் தடுப்பில் ஒரு பெரிய பங்கை வகிக்கக்கூடிய மற்றும் ‘நீருக்கு அடியிலோ அல்லது நீரின் மேலேயோ எந்த நேரத்திலும் எதிரிக்கு மரண அடி கொடுக்கக்கூடிய’ கடற்படைகளை ‘விரைவாக உருவாக்க’ வேண்டும் என்று  […]

அரசியல் இலங்கை செய்தி

டயஸ்போராக்களின் தேவைக்கேற்ப செயல்படுகிறது NPP அரசு! கூட்டு எதிரணி குற்றச்சாட்டு!

  • June 6, 2026
  • 0 Comments

“ வாக்களித்த மக்கள் பற்றி சிந்திக்காது, டயஸ்போராக்களின் தேவைக்கேற்பவே என்பிபி அரசாங்கம் செயல்படுகின்றது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கு ஜனநாயக வழியில் கூட்டு எதிரணி போராடும்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரும், அரசியல் செயற்பட்டாளருமான சுகீஸ்வர பண்டார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே நாட்டு […]

உலகம் கல்வி

வட்டி வீத அதிகரிப்பு அச்சம்: சரிந்தது சர்வதேச பங்குச்சந்தை!

  • June 6, 2026
  • 0 Comments

அமெரிக்க Federal Reserve வட்டி வீதங்களை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளைக் கொண்ட Nasdaq குறியீடு, 2025 ஏப்ரலுக்குப் பிறகான தனது மிகப்பெரிய ஒருநாள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான வேலைவாய்ப்புத் தரவுகள் எதிர்பாராத அளவிற்கு வலுவாக வெளிவந்ததைத் தொடர்ந்து, இந்த வருடத்தின் பங்குச்சந்தை லாபங்கள் நீடிக்காது என்ற அச்சத்தில் முதலீட்டாளர்கள் […]

ஐரோப்பா

நேட்டோ நாட்டை குறிவைக்கும் ரஷ்யா : பிரித்தானியாவின் பாதுகாப்பு உத்தி என்ன?

  • June 6, 2026
  • 0 Comments

ரஷ்யாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களை வெளிப்படுத்திய பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். ரஷ்யா நான்கு ஆண்டுகளுக்குள் நேட்டோ நாடொன்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறையினரின் கணிப்பையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்பு, நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தைத் தனது அரசாங்கம் வெளியிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு ட்ரோன் தயாரிப்பாளரைச் சந்தித்து […]

இலங்கை செய்தி

3,000 போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தவர் காலியில் கைது!

  • June 6, 2026
  • 0 Comments

காலி பகுதியில் சட்டவிரோத போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை பொலிஸார் நேற்று (06) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து சுமார் 3,000 போதை மாத்திரைகளும், 125,000 பணமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், கைதான நபர் ஒரு தனியார் மருந்தகத்தில் பணியாற்றுபவர் என்பது கண்டறியப்பட்டது. ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த […]

இலங்கை செய்தி

36 ஆண்டுகால அகதி வாழ்வுக்கு விடிவு எப்போது?தொடரும் போராட்டம்!

  • June 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு – மயிலிட்டி பகுதியில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி நேற்று ஏழாவது வெள்ளிக்கிழமையாகவும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். வலிகாமம் வடக்கின் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் யுத்தம் காரணமாகத் தமது சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அன்று முதல் இன்று வரை […]

ஐரோப்பா

“ஐரோப்பிய நாடுகள் மாபெரும் தவறு செய்துள்ளன” – அமெரிக்க தூதர் சாடல்!

  • June 6, 2026
  • 0 Comments

ஈரான் போர் விவகாரத்தில் நேட்டோ நட்பு நாடுகள் அமெரிக்காவிற்கு உதவாதது மாபெரும் தவறு என ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அமெரிக்கத் தூதர் ஆண்ட்ரூ புட்சர் (Andrew Pudzer) தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, ஐரோப்பியர்களுக்கு உதவ வேண்டிய கடமை நேட்டோவிற்கு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா முதன்முதலில் ஈரான் மீது போர் தொடுத்தபோது, ​​நேட்டோ நாடுகள் அதற்கு உதவ முன்வராததால் ட்ரம்ப் இன்னும் அதிருப்தியில் இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார். ஸ்பெயின் மற்றும் […]