உலகம்

மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதல் – 06 பேர் கைது!

மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட்  (Flinders Street Station) ரயில் நிலையத்தில் நேற்று  இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த வன்முறை மோதலில் சுமார் 10 பேர் ஈடுபட்ட நிலையில், அவர்களில் 06 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

17 வயது சிறுவன் ஒருவனுக்கு கையில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும்,  அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும்  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் 22 வயது இளைஞர் ஒருவர் மீது கலவரம், கவனக்குறைவாகக் காயம் ஏற்படுத்துதல், ஆயுதத்தால் தாக்குதல் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதத்தை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இந்தச் சம்பவம் விக்டோரியாவின் அரிவாள் தடைச் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்