லெபனான் ஒப்பந்தம் ஒரு வரலாற்று வெற்றி – நெதன்யாகு மகிழ்ச்சி
லெபனானுடன் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு வரவேற்றுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை ஒரு வரலாற்றுச் சாதனை என்று வர்ணித்த நெதன்யாகு, இது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவிற்கு ஒரு பெரும் பின்னடைவு என்றும் கூறினார்.
அந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலின் பாதுகாப்பிற்குத் தேவைப்படும் வரை லெபனானுக்குள் ஒரு பாதுகாப்பு மண்டலத்தைப் பராமரித்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உள்ள உரிமையை அமெரிக்காவும் லெபனானும் அங்கீகரித்துள்ளன என்று அவர் கூறினார்.
ஹிஸ்புல்லா மற்றும் பிற அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் நிராயுதபாணியாக்கப்படும் வரையிலும், லெபனானிலிருந்து இஸ்ரேலுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லாத வரையிலும் இதைத் தொடர்வோம் என்று இஸ்ரேலியப் பிரதமர் கூறினார்.
இந்த ஆண்டு தேர்தல்களுக்குப் பிறகு ஒரு விரிவான தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக நெதன்யாகுவும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




