உலகம் செய்தி முக்கிய செய்திகள்

தாக்குதலை நிறுத்த ஈரான், அமெரிக்கா இணக்கம்

ஜூன் 17 அன்று எட்டப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்த நீரிணை மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் நீரிணை தொடர்பாக நிலவி வரும் மோதல்களை தற்காலிகமாக நிறுத்தவும், இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் நடத்திய தாக்குதல்களால் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராது என அஞ்சப்பட்ட நிலையில், இந்த முடிவு அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

“இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) அனைத்து அம்சங்கள் குறித்தும் தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தொடரவுள்ளன.

தற்போதைக்கு இரு நாடுகளும் தங்களது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும், மேலும் கப்பல்கள் சுதந்திரமாக நடமாடலாம்” என்று அந்த அதிகாரி கூறினார்.

ஜூன் 17 அன்று எட்டப்பட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்த நீரிணை மீண்டும் போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ‘ஆக்சியோஸ்’ (Axios) ஊடகம் முதலில் வெளியிட்ட இந்தச் செய்தியின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை செவ்வாய்க்கிழமை கத்தாரில் மீண்டும் தொடங்கவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஹார்முஸ் நீரிணையில் சென்ற சரக்குக் கப்பல் மீது ஈரானின் ஏவுகணை தாக்கியதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபட்டன.

இந்த நிலையில், தற்போது மீண்டும் ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் திரும்பியுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி