போர்ச்சுகலில் நிலநடுக்கம்
போர்ச்சுகலின் சுற்றுலாப் பகுதியான அல்கார்வில் (Algarve) இன்று மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 4.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் கடல் மற்றும் வளிமண்டல நிறுவனம் (IPMA) தெரிவித்துள்ளது.
இதன் அதிர்வு லாகோஸ் (Lagos) மற்றும் போர்டிமாவோ (Portimao) நகரங்களிலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, கேப் செயின்ட் வின்சென்ட்டிலிருந்து (Cape St. Vincent,) சுமார் 70 கி.மீ தொலைவில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




