இலங்கை செய்தி

நீதிகோரி செம்மணியில் உரிமைப்பந்தம் போராட்டம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள் எழுச்சிப் போராட்டம் நேற்று மாலை செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்குத்திடலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில், அங்குள்ள அணையா விளக்கு தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரையில் 412 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றுடன், கடந்த 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட 15 எலும்புக்கூடுகளையும் சேர்த்து, மொத்தமாக அடையாளம் காணப்பட்ட 427 எலும்புக்கூடுகளை நினைவுறுத்தும் வகையில் 427 தீப்பந்தங்கள் கொளுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த உணர்வுபூர்வமான நிகழ்வில், கடத்தப்பட்டு மற்றும் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டு தங்களது நீதிக்கான குரலை எழுப்பினர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை