உலகப் பொருளாதாரத்தை மிரட்டும் மத்திய கிழக்கு போர்!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை உலக வங்கி குறைத்துள்ளது.
எரிசக்தி விநியோகத்தில் கடுமையான தடைகள் ஏற்பட்டால், இந்த வளர்ச்சி விகிதம் 1.3 சதவீதமாகக் குறையக்கூடும் என்றும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, போரின் தாக்கத்தால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈராக் போன்ற எரிசக்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன.
ஜனவரி மாதக் கணிப்புகளுடன் ஒப்பிடுகையில், தற்போது மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி முன்னறிவிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகப் பொருளாதாரம் சந்திக்கும் மிகக்குறைந்த வளர்ச்சி விகிதமாக இது கருதப்படுகிறது.




