ஐரோப்பா

பிரான்ஸுக்கு இறுதி எச்சரிக்கை!!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது பிரான்ஸ் அரசாங்கம்  03 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில் அந்த வரியை நீக்காவிட்டால் அந்நாட்டில் தயாரிக்கப்படும் ஒயின் மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க சந்தையில் பிரெஞ்சுப் பொருட்கள் மீது கணிசமான வரிகள் விதிக்கப்படுவதைத் தவிர்க்க, இந்த வரியை உடனடியாக நீக்குமாறு மக்ரோனை நேரடியாக வலியுறுத்திய ட்ரம்ப்,  இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். “இந்த வரி தொடர்ந்தால், பிரான்சிலிருந்து வரும் அனைத்து ஷாம்பெயின்கள் […]

இலங்கை செய்தி

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம்!

  • June 15, 2026
  • 0 Comments

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இந்நிலையில், தங்களை உடனடியாகச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும், பலாலி சந்திக்கு அருகிலும் இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவு மக்கள் இராணுவ நடவடிக்கையினால் தங்களின் […]

உலகம் செய்தி

படைகளை மீளப்பெற இஸ்ரேல் மறுப்பு: மீண்டும் பரபரப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து தங்கள் ராணுவத்தை விலக்கிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Israel Katz திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் படைகளை தொடர்ந்து தக்க வைக்க இஸ்ரேல் தீர்மானித்துள்ளது. இஸ்ரேலிய எல்லைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அண்டை நாடுகளில் உள்ள தீவிரவாதக் கட்டமைப்புகளை முழுமையாக அழிப்பதே தங்களின் முதன்மை இலக்கு என அவர் விளக்கியுள்ளார். மேலும், இந்த […]

ஐரோப்பா

நோர்வே பட்டத்து இளவரசியின் மூத்த மகனுக்கு சிறை தண்டனை!

  • June 15, 2026
  • 0 Comments

நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட்டினின் மூத்த மகனான மரியஸ் போர்க் ஹோய்பி  (Marius Borg Høiby) எதிர்கொண்டுள்ள கற்பழிவு வழக்கில் 04 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் இரண்டு பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள், ஒரு குடும்ப வன்முறைக் குற்றம் மற்றும் பிற குற்றங்களில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய  ஓஸ்லோ மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் மற்றொரு பாலியல் வழக்கில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டுக்களை ஹோய்பி மறுத்துள்ள […]

உலகம் செய்தி

அமைதி திரும்பினாலும் ஹார்முஸ் நீரிணையால் ஆபத்து!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தானதும், கடலில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஹார்முஸ் நீரிணை திறக்கப்படவுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக பரபரப்பான இந்த எண்ணெய் போக்குவரத்துப் பாதையை ஈரான் முழுமையாக முடக்கியிருந்தது. அத்துடன், கண்ணி வெடிகளும் வீசப்பட்டன. இவ்வாறு ஹார்முஸ் நீரிணையில் வீசப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாகக் கண்டறிந்து அகற்றுவதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம் என்று அமெரிக்க கடற்படையின் ஓய்வுபெற்ற […]

உலகம்

முடிவுக்கு வந்த போர் : சர்வதேச நிதிச் சந்தைகளில் உச்சம் தொட்ட பங்குகள்!

  • June 15, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  சர்வதேச நிதிச் சந்தைகள் இன்ற ஏற்றம் கண்டுள்ளன. ஸ்பானிய பங்குச் சந்தை இன்றைய முக்கிய பங்குகளில் ஒன்றாகத் தொடங்கியது. ஐபெக்ஸ் (Ibex) 35 குறியீடு அனைத்து எதிர்ப்பு நிலைகளையும் தகர்த்து, 19,000 புள்ளிகளைக் கடந்து 19,122 புள்ளிகளை எட்டி, ஒரு புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இந்த சமீபத்திய எழுச்சியுடன், இந்த ப்ளூ-சிப் ( blue-chip) குறியீடு ஆண்டின் தொடக்கத்திலிருந்து சுமார் 10% உயர்வை […]

உலகம்

ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்!!! வொஷிங்டனில் அரசியல் கொந்தளிப்பு

  • June 15, 2026
  • 0 Comments

போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேஅமைதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, வொஷிங்டனில் அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது . ஜனநாயகக் கட்சியினர் ஒப்பந்தத்தின் விவரங்களையும், போர் தொடர்பான ஆதாயங்கள் மற்றும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் இந்த முன்னேற்றத்தை ஒரு பெரும் இராஜதந்திர வெற்றி எனக் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெற […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை! உறுதிப்படுத்தினார் ஸ்டாமர்!

  • June 15, 2026
  • 0 Comments

16 வயதுக்குட்பட்டவர்கள் அனைத்து முக்கிய சமூக ஊடக செயலிகளிலிருந்தும் தடை செய்யப்படுவார்கள் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். டவுனிங் வீதியில் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “இன்று நம் நாட்டிற்கு ஒரு முக்கியமான தருணம். இது ஒரு பெரிய முன்னேற்றம், நம் குழந்தைகளுக்கும் நம் எதிர்காலத்திற்கும் ஒரு உண்மையான மாற்றமாகும். ஏனென்றால், 16 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கும் என்பதை இன்று என்னால் […]

உலகம்

ஈரானுடனான போர் முடிவுக்கு வருகின்றது, ஒப்பந்தமும் எட்டப்படது!! டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

ஈரானுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தனது அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள கப்பல்கள் தங்களது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், எண்ணெய் ஏற்றுமதி மீண்டும் தொடங்குவதற்கான நேரம் இது என்றும் கூறியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் வெள்ளிக்கிழமை முதல் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும், கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டொனால்ட் டிரம்ப் […]

இலங்கை செய்தி

கேபியிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் குறித்து தீவிர விசாரணை!

  • June 15, 2026
  • 0 Comments

புலிகள் அமைப்பின் சர்வதேச வலைப்பின்னலின் முன்னாள் தலைவரான கேபி எனப்படும் குமரன் பத்மநாதனிடமிருந்து பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டதன், பின்னர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் பெருந்தொகை தங்கம் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் மேற்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய முக்கிய பிரதானிகள் சிலர் விசாரணைக்கு வரவழைக்கப்படவுள்ளன. சிங்கள இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த வாக்குமூலங்களின் மூலம் வெளிப்படும் தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் […]