உலகம் செய்தி

அமைதி திரும்பினாலும் ஹார்முஸ் நீரிணையால் ஆபத்து!

அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தானதும், கடலில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக ஹார்முஸ் நீரிணை திறக்கப்படவுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகின் மிக பரபரப்பான இந்த எண்ணெய் போக்குவரத்துப் பாதையை ஈரான் முழுமையாக முடக்கியிருந்தது. அத்துடன், கண்ணி வெடிகளும் வீசப்பட்டன.

இவ்வாறு ஹார்முஸ் நீரிணையில் வீசப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாகக் கண்டறிந்து அகற்றுவதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் வரை ஆகலாம் என்று அமெரிக்க கடற்படையின் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் Mark Montgomery தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் பாதுகாப்புக்கான அறக்கட்டளையின் (FDD) மூத்த உறுப்பினராக தப்போது பதவி வகிக்கும் Montgomery இதுகுறித்து விளக்குகையில்:

“அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளின் ராணுவக் கப்பல்களின் பாதுகாப்புத் துணையின்றி, சர்வதேசக் கப்பல்கள் தடையின்றிப் பயணிக்க வேண்டுமானால், அங்குள்ள அனைத்துக் கண்ணிவெடிகளையும் முழுமையாகக் கண்டறிந்து துப்புரவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து அந்தப் பாதையைச் சோதித்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு நீண்ட காலம் எடுக்கும்.”

கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கினாலும், எண்ணெய் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளில் இருந்து உலக நாடுகள் முழுமையான நிம்மதியை அடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம்.” என்று அட்மிரல் மாண்ட்கோமரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், உடன்பாடு கையெழுத்தான ஒரே வாரத்திற்குள் சர்வதேச எண்ணெய் சந்தையில் ஒரு வெளிப்படையான நிம்மதி மற்றும் சாதகமான மாற்றம் தெரியத் தொடங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி