உலகம்

பாகிஸ்தானில் பெண் மருத்துவர் மீது ஆசிட் வீச்சு!! தொடர் போராட்டம் முன்னெடுப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் பெண் மருத்துவர் மீது அமிலத் தாக்குதல் (ஆசிட் வீச்சி) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார அமைப்பில் சீர்திருத்தங்கள் மற்றும் சுகாதாரச் செயலாளர் பதவி விலகக் கோரி பாகிஸ்தானிய மருத்துவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 29 வயதான மருத்துவர் மஹ்னூர் நசீர், கடந்த 05 ஆம் திகதி லிஃப்ட் ஆபரேட்டரால் அமிலத் தாக்குதலுக்கு உள்ளானார். இதில் அவரது முகம் மற்றும் உடலில் 13 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அவர் சிறப்பு சிகிச்சைக்காக விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார். […]

ஐரோப்பா செய்தி

நடத்தை மாறினால் மட்டுமே ஈரான் மீதான தடை நீங்கும்: EU அறிவிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

ஈரானின் நடவடிக்கைகளில் உண்மையான மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சிந்திக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தடைகளை நீக்குவதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “களத்தில் ஒரு உண்மையான மற்றும் சாதகமான மாற்றம் ஏற்படும் போது மட்டுமே, அந்தத் தடைகளை நீக்குவது குறித்து நாம் சிந்திக்க […]

ஐரோப்பா

ஸ்டாமரின் சொத்துக்களுக்கு தீவைப்பு!! குற்றவாளிகள் பொலிஸ் காவலில்!

  • June 15, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரின் வீடு மற்றும் கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு தீவைத்த ரோமன் லவ்ரினோவிச் (Roman Lavrynovych) மற்றும் ஸ்டானிஸ்லாவ் கார்பியூக் (Stanislav Carpiuc) ஆகிய இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் அதுவரை  பொலிஸ் காவலில் வைக்கப்படுவார்கள் என ஓல்ட் பெய்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவங்கள், ‘எல் மனி’ என்று அறியப்பட்ட, ரஷ்ய மொழி பேசும் நபர் ஒருவரால்  திட்டமிடப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேற்படி […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம்: இஸ்ரேல் நிதி அமைச்சர் போர்க்கொடி!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி உடன்பாட்டிற்கு எதிராக இஸ்ரேலின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) மற்றும் யாஷர் (Yashar) கட்சியின் தலைவரான காடி ஐசன்கோட் (Gadi Eisenkot) ஆகியோரே இவ்வாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர். “இது ஒரு தோல்வியடைந்த அரசாங்கத்தின் மோசமான முடிவாகும். பிரதமர் நெதன்யாகு வழங்கி வந்த ‘முழுமையான வெற்றி’ என்ற வெற்று வாக்குறுதிகளுக்கும், தற்போது உருவாகியுள்ள இந்த உடன்பாட்டிற்கும் இடையே ஒரு […]

இலங்கை

உள்ளுராட்சி ஆணையாளராக றாபியை நியமித்த கிழக்கு ஆளுநர்!!

  • June 15, 2026
  • 0 Comments

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான ஏ.ரி.எம். றாபியை கிழக்கு மாகாண ஆளுநர் நியமித்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று  (15) இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இப்பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கு முன்னதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் […]

உலகம் செய்தி

போர் விமானங்கள், கப்பல்களை களமிறக்கும் பிரான்ஸ்!

  • June 15, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை கடல் வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான கூட்டு ராணுவ நடவடிக்கை இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தொடங்கப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron அறிவித்துள்ளார். பிரான்சில் இன்று நடைபெற்ற G7 உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இந்த இந்த தகவலை வெளியிட்டார். ஹார்முஸ் நீரிணையில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை மீண்டும் நிலைநிறுத்த பிரிட்டனும் பிரான்சும் மிக விரைவாகச் செயல்படத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் […]

உலகம் செய்தி

சுரேஷ் சலே விசாரணைக்கு அஞ்சுவது ஏன்?

  • June 15, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “சுரேஷ் சலே புலனாய்வு அதிகாரியாக, அரச அதிகாரியாக இருந்தவர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனக்கு தெரிந்தவற்றை கூறி, விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும். மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் அவருக்கு தொடர்பில்லையெனில், விசாரணைக்கு ஒத்துழைப்பதே சிறந்தது. குற்றவாளியெனில்தான் […]

இலங்கை

தங்கத்தின் விலை 4,325 அமெரிக்க டொலராக உயர்வு!! இலங்கையிலும் அதிகரிப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,325 அமெரிக்க டொலராக உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் தங்கத்தின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (15) காலை 9.00 மணிக்கு பதிவான விலைகளுடன் ஒப்பிடுகையில், உள்ளூர் தங்கத்தின் விலை  6,000 ரூபாயால் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இன்று காலை கொழும்பு கடல் வீதி தங்கச் சந்தையில் 22 காரட் பவுண் ஒன்றின்  விலை  360,600 ரூபாயாக  பதிவாகியுள்ளது. இதற்கிடையில், 24 காரட் பவுண் ஒன்றின் விலை,  392,000 ஆக உயர்ந்துள்ளதாக […]

இலங்கை

2.5 மில்லியன் டொலர் மாயமான விவகாரத்தில் மத்திய வங்கிக்கும் பங்கு?

  • June 15, 2026
  • 0 Comments

திறைசேரியில் இருந்து மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி தொடர்பில் விசாரணை செய்ய பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி, நிதிச் சட்டத்தின் மூலம் சுயாதீனமாக்கப்பட்ட பின்னர், எந்தவொரு தரப்பிற்கும் பொறுப்புக்கூறாத மற்றும் கட்டுப்படாத ஒரு நிறுவனமாகத் தன்னைத்தானே வரைவிலக்கணப்படுத்திக் கொண்டுள்ளதே இங்கு காணப்படும் பிரதான பிரச்சினையாகும் எனவும் அந்த […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணைபாதுகாப்பு: பிரிட்டன், பிரான்ஸ் கைகோர்ப்பு!

  • June 15, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள அமைதி உடன்பாட்டை பிரிட்டன் பிரதமர் Keir Starmer வரவேற்றுள்ளார். இது மிகவும் குறிப்பிடத்தக்க திருப்புமுனை எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து கடந்த சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தான் விரிவாக பேச்சு நடத்தியதாகவும் Keir Starmer குறிப்பிட்டுள்ளார். G7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் Keir Starmer ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு , “இந்த உடன்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த சில வாரங்களாக […]